Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாராளுமன்றம் நாளை கூடுகிறது

பாராளுமன்றம் நாளை கூடுகிறது

4 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

பாராளுமன்றம் ஏப்ரல் 7, 9 மற்றும் 10ஆம் திகதிகளில் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் 2026.03.19ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.

பாராளுமன்றம் கூடும் இத்தினங்களில் காலை 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைய ஏப்ரல் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 4.45 மணி வரை விளையாட்டில் பதார்த்தப் பயன்பாட்டிற்கு எதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மற்றும் இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், 2026.03.17ஆம் திகதி பாராளுமன்றத்தில் முதலாவது வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்ட உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் சமூகப் பாதுகாப்பு உதவுதொகை சட்டமூலத்திற்கு அரசியலமைப்பின் உறுப்புரை 121இன் பிரகாரம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்படாவிட்டால் அன்றைய தினம் விவாதத்திற்கு எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பி.ப 4.45 மணி முதல் பி.ப 5.00 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளைத் திருத்தங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்படும். அத்துடன், பி.ப 5.30 மணிக்கு இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை விவாதம் இன்றி அனுமதிக்கப்படும்.

ஏப்ரல் 8ஆம் திகதி புதன்கிழமை அரசாங்க விடுமுறை தினம் என்பதால் அன்று பாராளுமன்றம் கூடாது.

ஏப்ரல் 9ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 2.00 மணி வரை (357ஆம் அத்தியாயம்) தரைப்படைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, (358ஆம் அத்தியாயமான) கடற்படைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, (359ஆம் அத்தியாயமான) வான்படைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் தீர்மானம் வெளியிடப்பட்டால் குறித்த விடயம் அன்றையதினம் விவாதம் இன்றி அங்கீகரிக்கப்படும்.

இதன் பின்னர் பி.ப 2.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை 2019 ஏப்ரல் 21 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து
செய்திகள்

மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து

July 22, 2026
ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்
செய்திகள்

ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்

July 22, 2026
போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!
செய்திகள்

போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!

July 22, 2026
Next Post
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசேட வேலைத்திட்டம்

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசேட வேலைத்திட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.