Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“திசைமாறிப் பயணிக்கும் மு.கா.வால் முஸ்லிம்களின் அபிலாசைகள் எட்டப்படாது”; ஹசன் அலி

“திசைமாறிப் பயணிக்கும் மு.கா.வால் முஸ்லிம்களின் அபிலாசைகள் எட்டப்படாது”; ஹசன் அலி

3 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்களின் நீண்டநாள் அரசியல் அபிலாசைகளான கல்முனை கரையோர நிர்வாக மாவட்டத்தை பெற்றுக்கொடுக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியால் ஒருபோதும் முடியாது என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், அக்கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகமும் ஆன எம்.ரி. ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

நிந்தவூரில் மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் மர்ஹூம் ஏ.எல்.எம். சலீம் அவர்களின் நினைவாக நேற்று முன்தினம் (11) நடைபெற்ற “அழியாத எழுத்து, மறையாத நினைவு” நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய ஹசன் அலி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆரம்ப நோக்கத்திலிருந்து விலகி செயற்பட்டு வருவதாகக் கடுமையாக விமர்சித்தார். கட்சியின் ஸ்தாபகர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் முன்வைத்த இலக்குகள், குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கு தனித்துவமான நிர்வாக அங்கீகாரம் வழங்கும் கனவு, இதுவரை நடைமுறைக்கு வரவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், தமிழ்–முஸ்லிம் நல்லுறவை வலுப்படுத்தும் முயற்சிகளில் அஷ்ரப் காட்டிய உறுதியையும், அந்த இலக்கை முன்னெடுக்க முக்கிய பங்கு வகித்தவர் மறைந்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் என்றும் அவர் நினைவுகூர்ந்தார்.

அம்பாறை மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம் மக்களுக்கு தன்னாட்சி வாய்ந்த நிர்வாக மாவட்டம் ஒன்றை உருவாக்குவது தான் மு.கா.வின் அடிப்படை இலக்காக இருந்த போதிலும், அது இன்னும் எட்டப்படாதது கட்சியின் பலவீனமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இன்றைய சூழலில் பல முஸ்லிம் அரசியல் கட்சிகள் இருப்பினும், இத்தகைய அடிப்படை உரிமைகளைப் பெற முடியாத நிலை கவலைக்குரியது எனக் கூறிய அவர், முஸ்லிம் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்குவது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

இந்த அடிப்படை நோக்கங்களை மறந்து செயல்படும் பட்சத்தில், “முஸ்லிம் கட்சி” என்ற அடையாளத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இழந்து வருவதாகவும் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அட்டை மூலம் பணம் செலுத்துபவர்களிடம் 3% கூடுதல் கட்டணம் அறவிடுவது சட்டவிரோதம்
செய்திகள்

அட்டை மூலம் பணம் செலுத்துபவர்களிடம் 3% கூடுதல் கட்டணம் அறவிடுவது சட்டவிரோதம்

July 26, 2026
விலங்குகளுக்கு உணவோ அல்லது நீரோ வழங்காதிருத்தல் குற்றம்; இலங்கையில் புதிய சட்டம்
செய்திகள்

விலங்குகளுக்கு உணவோ அல்லது நீரோ வழங்காதிருத்தல் குற்றம்; இலங்கையில் புதிய சட்டம்

July 26, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்களை கடத்தி வந்தவர் கைது
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்களை கடத்தி வந்தவர் கைது

July 26, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்படுமா? – அமைச்சரவைப் பத்திரம் தயாரிப்பு
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்படுமா? – அமைச்சரவைப் பத்திரம் தயாரிப்பு

July 26, 2026
தனியார் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் முயற்சி? – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
செய்திகள்

தனியார் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் முயற்சி? – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

July 26, 2026
அரிசியை அதிகவிலைக்கு விற்று 5 இலட்சத்தை இழந்த கடைக்காரர்
செய்திகள்

அரிசியை அதிகவிலைக்கு விற்று 5 இலட்சத்தை இழந்த கடைக்காரர்

July 26, 2026
Next Post
பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் சிசுவின் சடலம் மீட்பு!

பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் சிசுவின் சடலம் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு