Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெண் வைத்தியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் விடுதி நோயாளி கைது

பெண் வைத்தியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் விடுதி நோயாளி கைது

6 months ago
in செய்திகள்

களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர், அங்கு பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தே நபர் மத்துகம பிம்புர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவராவார்.

பெண் வைத்தியர் சந்தேக நபரின் இரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கச் சென்றபோது, அவர் வைத்தியரின் மார்புப் பகுதியைத் தொட்டுள்ளார்.

அந்த நேரத்தில் வைத்தியர் இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்போவதாகத் எச்சரித்துள்ளார்.

எனினும், மீண்டும் பரிசோதனை மேற்கொண்டபோது இரண்டாவது முறையும் அந்த வைத்தியருக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து முறைப்பாடு கிடைத்ததையடுத்து, பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

எனினும், அவருக்குச் சிகிச்சை தேவைப்படுவதால் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையிலேயே அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சந்தேக நபர் இன்றைய தினம் (15) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸ் பரிசோதகர் நாலக குணசேகரவின் ஆலோசனையின் பேரில், உப பொலிஸ் பரிசோதகர் வன்னியாரச்சி உள்ளிட்ட அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இறக்காமத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!
செய்திகள்

இறக்காமத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

October 25, 2026
கூரை சூரிய மின்சாரத்திற்கு புதிய கட்டண முறைமை; குறைந்த விலையில் மின்சாரம் வழங்க முன்வருவோருக்கு முன்னுரிமை!
செய்திகள்

கூரை சூரிய மின்சாரத்திற்கு புதிய கட்டண முறைமை; குறைந்த விலையில் மின்சாரம் வழங்க முன்வருவோருக்கு முன்னுரிமை!

October 25, 2026
மின்சார வாகன மின்கல முகாமையில் பெரும் குறைபாடு; கணக்காய்வில் அம்பலம்!
செய்திகள்

மின்சார வாகன மின்கல முகாமையில் பெரும் குறைபாடு; கணக்காய்வில் அம்பலம்!

October 25, 2026
குவைத்தில் இரு இலங்கைப் பெண்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழப்பு!
உலக செய்திகள்

குவைத்தில் இரு இலங்கைப் பெண்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழப்பு!

October 25, 2026
பகிரங்க மன்னிப்பு கோரினார் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி
செய்திகள்

பகிரங்க மன்னிப்பு கோரினார் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி

October 25, 2026
குளக்கரையில் மோட்டார் குண்டு; கிணற்றுக்குள் துப்பாக்கிப் பாகங்கள்!; திருக்கோவில் பொலிஸார் விசாரணை
செய்திகள்

குளக்கரையில் மோட்டார் குண்டு; கிணற்றுக்குள் துப்பாக்கிப் பாகங்கள்!; திருக்கோவில் பொலிஸார் விசாரணை

October 25, 2026
Next Post
ஹந்தானை மலைப்பகுதியில் காணாமல்ப்போன யூடியூபர் மீட்கப்பட்டார்

ஹந்தானை மலைப்பகுதியில் காணாமல்ப்போன யூடியூபர் மீட்கப்பட்டார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு