Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு மேலும் அதிகரிக்கும்; எதிர்வு கூறும் மத்திய வங்கி

இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு மேலும் அதிகரிக்கும்; எதிர்வு கூறும் மத்திய வங்கி

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு இந்த ஆண்டில் கணிசமாக உயரக்கூடும் என இலங்கை மத்திய வங்கி எதிர்வு கூறியுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடிகள் மற்றும் உலகளாவிய எண்ணெய் சந்தையில் நிலவும் ஸ்திரமற்ற நிலை காரணமாக, எதிர்வரும் காலத்தில் எண்ணெய் விலைகள் அதிகரித்தே காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எரிபொருள் இறக்குமதிச் செலவானது இலங்கையின் மொத்த இறக்குமதிச் செலவில் பெரும் பங்கைக் கொண்டுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக மொத்த இறக்குமதியில் சுமார் 20% அதற்காகச் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், 2025 ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய இறக்குமதி அளவு அதிகரித்த போதிலும், மொத்தச் செலவு 2024 ஆம் ஆண்டின் 4.4 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 2025 இல் 4 பில்லியன் அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது.

கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலியம் மற்றும் நிலக்கரி விலைகள் குறைந்தமையே இதற்கு முக்கிய காரணமாகும். அத்துடன், சர்வதேச சந்தை விலை மாற்றங்களுக்கு ஏற்ப கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் சராசரி இறக்குமதி விலை 2024 இல் 84.7 டொலரிலிருந்து 2025 இல் 73.2 டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை, உள்நாட்டு எரிபொருள் விலைகளுக்காகச் செலவுகளைப் பிரதிபலிக்கும் விலை திருத்த முறைமை 2025 ஆம் ஆண்டு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், அதன் மூலம் உலகளாவிய விலை மாற்றங்கள் நேரடியாக உள்நாட்டு சந்தையில் பிரதிபலிக்க இடமளிக்கப்பட்டது.

இதற்கமைய, 2024 ஆம் ஆண்டு இறுதியுடன் ஒப்பிடுகையில் 2025 இறுதிக்குள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் விற்பனை செய்யப்படும் 92 ரக பெற்றோல், வெள்ளை டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் முறையே 15, 9 மற்றும் 8 ரூபாவினால் குறைந்துள்ளன.

மேலும், பொருளாதார நடவடிக்கைகள் வளர்ச்சியடைந்தமையால் 2025 ஆம் ஆண்டில் பெற்றோலிய உற்பத்திப் பொருட்களின் விற்பனை 7.4% இனால் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் அழுத்தங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், 2026 மார்ச் மாதத்தில் சாதாரண விலை நிர்ணயக் கட்டமைப்பிற்குப் புறம்பாக எரிபொருள் விலைகளை கணிசமாக உயர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
Next Post
திறைசேரி கொள்ளை சைபர் தாக்குதல் என்பதை விட கவனக்குறைவின் விளைவாகவே ஏற்பட்டுள்ளது ; ஹர்ஷ டி சில்வா

திறைசேரி கொள்ளை சைபர் தாக்குதல் என்பதை விட கவனக்குறைவின் விளைவாகவே ஏற்பட்டுள்ளது ; ஹர்ஷ டி சில்வா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.