Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன பணத்திலும் ஹேக்கர்ஸ் கைவைத்துள்ளனராம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன பணத்திலும் ஹேக்கர்ஸ் கைவைத்துள்ளனராம்

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மேற்கொண்ட பணச் செலுத்துகை மற்றும் நிறுவனத்தின் சென்னை காரியாலயத்தில் இடம்பெற்ற நிதி முறைகேடு குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அந்த நிறுவனம் நேற்று (16) தெரிவித்துள்ளதாவது, துபாயில் அமைந்துள்ள சேவை வழங்கும் நிறுவனம் ஒன்றின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் கணக்கு மூன்றாம் தரப்பு ஒன்றினால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அந்த மோசடியான மின்னஞ்சல் செய்திகள் மூலம் வழங்கப்பட்ட வங்கி கணக்கு விபரங்களின் அடிப்படையில், தமது நிறுவனம் 974,000 திர்ஹாம் தொகையை அந்த தவறான கணக்கிற்கு செலுத்தியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை காரியாலயத்தில் இடம்பெற்ற நிதி முறைகேடு குறித்து விளக்கமளித்துள்ள அந்த நிறுவனம், சென்னையில் அமைந்துள்ள தமது காரியாலயத்தில் பணிபுரிந்த நிதிப் பிரிவைச் சேர்ந்த இந்திய ஊழியர்கள் குழுவொன்றே இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அவர்கள் வணிக விலைப்பட்டியல்களின் கையொப்பங்கள் மற்றும் பணச்செலுத்துகை விபரங்களை போலி ஆவணங்கள் மூலம் மாற்றியமைத்து, நீண்டகாலமாக 22 மில்லியன் இந்திய ரூபாய் தொகையை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் நியமனம்
செய்திகள்

பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் நியமனம்

July 26, 2026
ஏவுகணை கையிருப்பு குறைந்ததால் தாக்குதலை ஒத்திவைக்கிறேன் என அறிவித்த ட்ரம்ப்
செய்திகள்

ஏவுகணை கையிருப்பு குறைந்ததால் தாக்குதலை ஒத்திவைக்கிறேன் என அறிவித்த ட்ரம்ப்

July 26, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபையின்18ஆவது ஆண்டு விழா
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபையின்18ஆவது ஆண்டு விழா

July 26, 2026
வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா
செய்திகள்

வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா

July 26, 2026
1200cc வரையிலான உயர் திறன் மோட்டார் சைக்கிள்களுக்கு நாட்டில் அனுமதி வழங்க கோரும் நாமல்
செய்திகள்

1200cc வரையிலான உயர் திறன் மோட்டார் சைக்கிள்களுக்கு நாட்டில் அனுமதி வழங்க கோரும் நாமல்

July 26, 2026
ஜனாதிபதி செயலகத்தின் 26 வாகனங்கள் தொடர்பில் தகவல் இல்லை
செய்திகள்

ஜனாதிபதி செயலகத்தின் 26 வாகனங்கள் தொடர்பில் தகவல் இல்லை

July 26, 2026
Next Post
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்குச் சொந்தமான வேன் விபத்து

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்குச் சொந்தமான வேன் விபத்து

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு