புதிதாக 10 பல்கலைக்கழகங்களை திறப்பதற்கு முன்னர், தற்போதுள்ள பல்கலைக்கழகங்களின் பௌதீக வளங்கள் மற்றும் ஏனைய வளங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
இவ்வாறான அறிக்கைகள் நடைமுறைக்குரியவை அல்ல என சுதந்திர மக்கள் சபையின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அடுத்த வருடம் நடைபெறவிருந்த ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பது பொருத்தமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், இல்லை என்றால் அடுத்த ஜனாதிபதி சட்டவிரோதமான ஜனாதிபதியாகவே இருப்பார் என்றும், ஜனாதிபதித் தேர்தலை உரிய நேரத்தில் நடத்தாவிட்டால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும்.
ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைந்ததன் பின்னர் மக்கள் அபிப்பிராயத்தை சோதிக்க வேண்டும் என முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர். தெரிவித்திருந்தார். மக்களின் விருப்பமே அதிகாரத்தின் கேந்திர ஸ்தானமாகும்.
இவ்வாறு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் பிற்போடப்பட்டதைப் போன்று ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முடியாது”
கடனின் இரண்டாம் தவணையை வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கையில் கணக்கெடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், இவ்வாறான நிலையில் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது பொருத்தமானதல்ல எனவும் பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.