ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த ஆணைக்குழுவை நியமித்தமைக்கு, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கவுக்கு நன்றி
தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக (17) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி பள்ளிவா சல்கள் முஸ்லிம்
நிறுவனம் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் சம்மேளன செயலாளர் ஏ..எல்.எம்.
சபீல் நழீமி தெரிவித்தார்.
இவ்வூடகவியலாளர் சந்திப்பில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளளத்தின் தலைவர் ரஊப் ஏ மஜீத் உட்பட சம்மேளன உறுப்பினர்கள்கலந்து கொண்டனர்.இதன் போது தொடர்;ந்து கருத்து தெரிவித்த சம்மேளன செயலாளர் ஏ..எல்.எம்.சபீல் நழீமி:சனல் 4 வில்,அஸாத் மௌலானா தெரிவித்துள்ள கருத்துக்கள் பாரதூரமானவை. இதைக் கருத்திலே கொண்ட ஜனாதிபதி இதுபற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் இமாமின் தலைமையில் 3 பேரடங்கிய ஆணைக்குழுவை நியமித்துள்ளார். அதற்
காக ஜனாதிபதிக்கு காத்தான்குடி சமூகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.
2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் எமது நாடு மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டதை நாம் அறிவோம்.குறிப்பாக அந்த ஈஸ்டர் தாக்குதலிலே ஈடுபட்ட ஒரு சிலர் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால், எமது காத்தான்குடி சமூகம் பாரியளவிலே பல்வேறு விடயங்களினாலும் பாதிக்கப்பட்டது.
வியாபர நடவடிக்கைகளை மேற் கொள்ளமுடியாமலிருந்தது. ஏனைய பிரதேசங்களுக்கு காத்தான்குடி முஸ்லிம்கள் செல்கின்ற போது, அவர்களை சந்தேக கண் கொண்டு பார்க்கின்ற நிலைமையும் இருந்தது.
மதங்கள் மற்றும் இனங்களுக்கிடையில் முஸ்லிம்களை சந்தேகக் கண் கொண்டு பார்க்கின்ற நிலை காணப்பட்டது. இப்படியான அச்சுறுத்தல்களையும் பல்வேறு வகையான சந்தேகங்களையும் இச்சமூகத்தின் மீது இந்த ஈஸ்டர் தாக்குதல் ஏற்படுத்தியது.எனவே,இதன் உண்மைத் தன்மைகளை கண்டறிய விசாரணைக் குழு நியமிக்கப்பட்டதை காத்தான்குடி சமூகம் பாராட்டுகிறது.