நோபல் பரிசு வென்றவர்களுக்கு வழங்கப்படும் ரொக்கத் தொகை 1 மில்லியன் குரோனரில் இருந்து 11 மில்லியன் குரோனராக உயர்த்தப்படும் என நோபல் அறக்கட்டளை அறிவித்துள்ளது.
சுவீடனின் நாணயமான குரோனரின் பெறுமதி குறைந்தமையே இதற்கு காரணம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலர் மற்றும் யூரோவுக்கு நிகராக குரோனரின் பெறுமதி குறைந்துள்ளமை இதுவே முதல் முறையாகும்.கடந்த ஓகஸ்ட் மாதம் சுவீடனில் பணவீக்கம் 7.2 சதவீதமாக இருந்தது.
கடந்த 1901 ஆம்ஆண்டு நோபல் பரிசுகள் முதன் முதலில் வழங்கப்பட்டபோது, ஒவ்வொரு
பிரிவிற்கும் 1.50 லட்சம் குரோனர்கள் வழங்கப்பட்டன.அதன் பின்னர் நோபல் அறக்கட்டளை படிப்படியாக இந்தத்தொகையை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் வெற்றியாளர்கள் ஒக்டோபர் மாதம் அறிவிக்கப்படுவார்கள் என நோபல் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.