கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று(20) முதல் பெட் ஸ்கேன்(PET Scan) பரிசோதனையை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கதிரியக்க அதிகாரிகளின் பற்றாக்குறையே இதற்கான காரணமென சங்கத்தின் தலைவர் சானக தர்மகீர்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஜீ.விஜேசூரியவிடம் வினவிய போது, சுகாதார அமைச்சரின் ஆலோசனைக்கமைய பயிற்சிகளை நிறைவு செய்த கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களை ஈடுபடுத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.