Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையிலேயே முதன்முறையாக மீட்கப்பட்ட புதுவித துப்பாக்கி

இலங்கையிலேயே முதன்முறையாக மீட்கப்பட்ட புதுவித துப்பாக்கி

4 days ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையிலேயே முதன்முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘மினி உசி’ ரக தானியங்கி துப்பாக்கி உள்ளிட்ட பல ஆயுதங்கள், கொழும்பில் உள்ள பொது மயானம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ‘மஹவத்தே சாமர’ என்ற குற்றவாளியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையிலேயே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் டுபாய் நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்ட மஹவத்தே சாமர என்ற குற்றவாளி, தற்போது பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணைகளின் மூலம் கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு பொது மயானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த துப்பாக்கிகளும் தோட்டாக்களும் கண்டெடுக்கப்பட்டன.

இவற்றில் ‘மினி உசி’ ரக தானியங்கி துப்பாக்கி ஒன்று, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், ஒரு மெகசின் மற்றும் 3 தோட்டாக்கள் ஆகியன அடங்கும்.

இந்த மினி உசி ரக துப்பாக்கி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது என்பது கண்டறியப்பட்டுள்ளதுடன், இதற்கு முன்னர் இலங்கையின் எந்தவொரு பொலிஸ் பிரிவினராலும் இந்த வகையான துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்படவில்லை.

இவ்வாறானதொரு துப்பாக்கி குறித்து கடந்த காலங்களில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்த போதிலும், அதனை கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது.

தங்களது எதிராளிகளை பயமுறுத்துவதற்காகவே இவர்கள் இந்த மினி உசி ரக துப்பாக்கியைப் பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
Next Post
தாயக எழுச்சிப் பாடலை எடிட் செய்து இணையத்தில் பதிவிட்ட பாடகர் யாழில் கைது

தாயக எழுச்சிப் பாடலை எடிட் செய்து இணையத்தில் பதிவிட்ட பாடகர் யாழில் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு