பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு ரஷ்யா தற்காலிக தடை விதித்துள்ளது.
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ள நிலையில் ரஷ்யா இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
உலக நாடுகளின் பொருளாதார தடை காரணமாக ரஷ்யாவில் பணவீக்கம், விலைவாசி ஏற்றம் அதிகரித்து மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், நாட்டின் பொருட்களிற்கான விலை ஏற்றத்தினை குறைப்பதற்காக இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இதன் காரணமாக ரஷ்யாவில் உள்நாட்டில் எரிபொருளின் விலை 4 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது.
ரஷ்யா ஒரு நாளைக்கு 9 லட்சம் பேரல்கள் டீசல் மற்றும் 60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேரல்கள் பெட்ரோல் ஏற்றுமதி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.