சர்வதேச சுயாதீன விசாரணைக்கு முன் மட்டுமே சாட்சியம் அளிப்பேன் என அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.ஜெனிவாவில் செனல் 4இன் ஆவணப்படம் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் மனிதஉரிமைசெயற்பாட்டாளர்களுக்கும் முழுமைமையாக நேற்று முன்தினம் காண்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது திடிரென நேரடியாக திரையில் தோன்றிய அசாத்மௌலானா இவ்வாறு தெரிவித்தார்.
ஜெனீவாவில் தலைமையகத்தை கொண்டியங்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமைகள் சபையின் ஏற்பாட்டில் செனல் 4 வின் வழிகாட்டலில் திரையிடப்பட்டபோது திரையில் தோன்றிய அசாத்மௌலானா தாக்குதல் சம்பந்தமான பல்வேறுவிடயங்களை எடுத்துரைத்தார்.
அத்துடன்பல முக்கிய அரசியல் படுகொலைகளுக்குப் பொறுப்பாளிகள். குறிப்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் நடராஜா ரவிராஜ் படுகொலைகள், ஊடகவியலாளர்களான லசந்த விக்கிரமதுங்க, சிவராம் மற்றும் நடேசன் படுகொலைகள் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் மற்றும் கார்ட்டூன் கலைஞர் பிரகோதாவின் காணாமல் போன சம்பவங்களுக்கும் இவர்களே பொறுப்பு. MI மற்றும் TMVP இணைந்து நடத்திய பல மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்களும் என்னிடம் உள்ளன.
அவர்கள் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், என் உயிருக்கு பயந்து அவர்களிடமிருந்து என்னால் விலக முடியவில்லை. இலங்கை அதிகாரிகள் என்னைக் கடத்திச் செல்வார், சிறையில் அடைப்பார்கள் அல்லது கொலை செய்வாகள் என்று இன்று வரை நான் அஞ்சுகிறேன். எனது அச்சத்தை அதிகப்படுத்தும் வகையில், செனல் ஃபோரின் ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டவுடன் பொலிசார் எனது தாயையும் எனது சகோதரியையும் சந்தித்தனர், மேலும் எனது தொலைபேசி எண்ணையும் எனது முகவரியையும் கண்டறியும் முயற்சியில் இரண்டு தெரியாத நபர்கள் எனது சகோதரியின் மகனை விசாரணை செய்தனர்.
செப்டம்பர் 5 ஆம் தேதி பிரிட்டிஷ் செனல் 4 ஒளிபரப்பிய “இலங்கையின் ஈஸ்டர் குண்டுவெடிப்புகள்” என்ற ஆவணப்படம் இலங்கையில் கணிசமான ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. பல்வேறு கட்டுரைகள் மற்றும் தலையங்கங்கள் எழுதப்பட்டுள்ளன, மேலும் ஆவணப்படம் ஒரு சர்வதேச சுயாதீன விசாரணைக்கு சில ஆதரவை உருவாக்கியுள்ளது, நிறைய வதந்திகள் மற்றும் போலி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன, மேலும் எனது மனைவி மற்றும் குழந்தைகளை கூட அவதூறு செய்து அவர்களின் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன
எனது அறிவின் காரணமாக, இலங்கை அரசாங்கத்தின் உளவுத்துறையால் நான் கடுமையாக அச்சுறுத்தப்பட்டேன். நான் எனது உயிரைக் காப்பாற்ற அரசியல் தஞ்சம் கோரி ஐரோப்பாவுக்குத் தப்பிச் சென்றேன். இலங்கையில் பல பயங்கரவாதத் தாக்குதல்கள், அரசியல் படுகொலைகள் மற்றும் கடத்தல்களுக்குத் திட்டமிடப்பட்டதற்கு சாட்சியாக, இந்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் சாட்சியமளிக்க நான் தயாராக இருக்கிறேன். எவ்வாறாயினும், இலங்கையில் உள்ள அதிகாரிகளுக்கு உண்மையை வெளிப்படுத்துவதில் ஆர்வம் இருப்பதாக நான் நம்பவில்லை. எனவே சர்வதேச சுயாதீன விசாரணைக்கு முன் மட்டுமே சாட்சியம் அளிப்பேன் என தெரிவித்துள்ளார்