வர்த்தமானியில் இந்த மாதம் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் என்பவற்றை சட்டத்தரணிகளின் கூட்டமைப்பு கண்டித்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட திருத்தப்படாத பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து எழுப்பப்பட்ட தீவிரமான மற்றும் அடிப்படையான கவலைகளுக்கு பதிலளிக்க இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது என்று சட்டத்தரணிகளின் கூட்டமைப்பு கூறுகிறது.
சட்டமூலங்கள் வர்த்தமானியில் வெளியிடப்படுவதற்கு முன்பு, நியாயமான மற்றும் வலுவான பொதுக் கலந்தாய்வுக்கு வழிவகுத்த எந்தவொரு வெளிப்படையான மற்றும் பொறுப்புணர்ச்சியான செயல்முறையையும் அரசாங்கம் பின்பற்றத் தவறிவிட்டது என்றும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த இரண்டு சட்டமூலங்களையும் உடனடியாக மீளப் பெறுமாறு சட்டத்தரணிகளின் கூட்டமைப்பு அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.