Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிளை ஓடிப் பார்த்து வாங்குவதாக திருடிச் சென்றவர் கைது

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிளை ஓடிப் பார்த்து வாங்குவதாக திருடிச் சென்றவர் கைது

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிள் வழங்குவதாக தெரிவித்து அதனை ஓடிப்பார்பதாக எடுத்துக் கொண்டு நூதனமாக திருடிச் சென்ற சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய திருடன் ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை (19) கைது செய்துள்ளதுடன் திருடிச் சென்ற 3 மோட்டார் சைக்கிள்களை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த நபர் காத்தான்குடி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் வாங்கி விற்பனை செய்யும் கடை ஒன்றுக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் சென்று அங்கு விற்பனைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை வாங்குவதாகவும் அதனை ஓடி பார்க்க வேண்டும் என்றதையடுத்து நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை கடை உரிமையாளர் குறித்த நபரிடம் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து குறித்த நபர் மோட்டார் சைக்கிளை அங்கிருந்து எடுத்து கொண்டு மட்டு திருகோணமலை வீதியில் உள்ள வீதி சமிக்கை விளக்குக்கு அருகில் நிறுத்தி கொண்டு Ikman.ik இணையத்தளத்தில் மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு என விளம்பரப்படுத்திய கொக்கட்டிச்சோலை பகுதியைச் சேர்ந்த வரையும் தொடர்பு கொண்டு அந்த மோட்டார் சைக்கிளை வாங்குவதாகவும் உடன் குறித்த வீதி சமிக்கை விளக்குக்கு அருகில் வருமாறு அழைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து இணையத்தில் மோட்டார் சைக்கிளை விற்பனை செய்யும் நபர் குறித்த பகுதிக்கு வந்ததும் அவரிடம் அந்த மோட்டார் சைக்கிளை ஓடி பார்க்க வேண்டும் என தெரிவித்து காத்தான்குடியில் இருந்து ஓடி பார்ப்பதாக திருடி வந்த மோட்டார் சைக்கிளை அவரிடம் கொடுத்துவிட்டு குறித்த நபரின் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று வாகரையில் விற்பனை செய்துள்ளார் எனவும் இவ்வாறு 2023ம் ஆண்டு ஒரு மோட்டார் சைக்கிளையும் திருடி விற்பனை செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த நபரை கைது செய்ததுடன் திருடப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களையும் மீட்டதுடன் குறித்த நபர் கடந்த காலத்தில் 8 குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
தெஹிவளை பொதுமயானப் பகுதியில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை பொதுமயானப் பகுதியில் துப்பாக்கிச் சூடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு