Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீதியமைச்சும் காணாமல்போனோர் அலுவலகமும் இணைந்து இன்றைய தினம் பிரதேச மட்டத்தில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று, மட்டக்களப்பு மேற்கு, ஏறாவூர்ப்பற்று ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த விசாரணை மற்றும் வாக்குமூலங்கள் வழங்கும் நடவடிக்கைகளை காணாமல்போனார் அலுவலக அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகளும் நீதியமைச்சின் சட்டத்தரணிகளும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் இந்த விசாரணை நடவடிக்கைகளையும் வாக்குமூலம் பதிவுசெய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுத்தனர்.

காணாமல் போனோர் அலுவலகத்திற்கு காணாமல் போனோர் தொடர்பாக அவர்களது உறவுகளினால் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய அவர்களின் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது மண்முனைப் பற்று பிரதேச செயலக பிரிவில் உள்ள காணாமல் போனோரின் உறவினர்களிடம் சாட்சியங்கள் பெறும் நடவடிக்கைகள் இடம்பெற்றது.

இன்றைய தினம் சாட்சியங்கள் பெறப்பட்டு மறுமலர்ச்சி உதவி வழங்குவதாகவும் மரண பதிவும் வழங்குவதாக காணாமல் போனோர் அலுவலகத்தினால் தெரிவிக்கப்பட்டதாக முறைப்பாடுகளை வழங்கியோர் தெரிவித்தனர்.

இதேநேரம் நேற்றைய தினம் மட்டக்களப்பில் உள்ள அலுவலகம், பட்டிப்பளை பிரதேச செயலகம், வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுகளில் கிடைக்கப்பெற்ற 295 முறைப்பாடுகளில் 233 விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டதாக காணாமல்போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவில் 144முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் அவற்றில் 116முறைப்பாடுகள் விசாரணைசெய்யப்பட்டுள்ளதுடன் வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவில் 78 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் 64 முறைப்பாடுகள் விசாரணைசெய்யப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு அலுவலகத்தில் 73 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் 53 விசாரணைசெய்யப்பட்டு வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக காணாமல்போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு