இலங்கை மத்திய வங்கி 2023 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் நாணயத்தாள்கள் மற்றும் நாணயங்கள் என 82 ஆயிரத்து 870 கோடி ரூபாய் எந்த வங்கிகளிலும் வைப்புச் செய்யப்படாது மக்களின் கைகளில் புழக்கத்தில் இருப்பதாக லங்கா பே நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இலங்கை மத்திய வங்கி நாணயத்தாள்கள் மற்றும் நாணயங்கள் என ஆயிரத்து 11 ஆயிரத்து 10 கோடி ரூபாய் பணத்தை புழக்கத்தில் விட்டுள்ளது. இதில் 28 ஆயிரத்து 140 கோடி ரூபாய் வங்கிகளிடம் உள்ளன. மீதமுள்ள 82 ஆயி ரத்து 870 கோடி ரூபாய் பணம் பொருளாதாரத்துக்கு எவ்வித பயனுமின்றி பொதுமக்கள் மத்திய புழக்கத்தில் உள்ளது.
சிலர் வருமான வரி செலுத்துவதை தவிர்க்கவும் தமது வசதிக்காகவும் வேறு காரணங்களுக்காகவும் பணத்தை வங்கியில் வைப்பு செய்யவில்லை என்பதால், அந்த பணத்தினால், அவர்களுக்கு எந்த பிரதிபலன்களும் கிடைக்காது.மேலும், வங்கிகளுக்கு பொது மக்களுக்கு கடன் வழங்கும் போது நிதி தட்டுப்பாடு ஏற்படும் எனவும் சன்ன டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.