தென் சீனக் கடலில் “மிதக்கும் தடுப்பு” அமைப்பது தொடர்பாக சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
சீன கடலோர காவல்படை “மிதக்கும் தடையை” நிறுவியதால், தமது நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளதாக பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.
தென் சீனக் கடல் எல்லை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல்கள் நிலவி வருகின்றன.
Bajo de Masinloc பகுதியானது மிகவும் செழிப்பான மற்றும் மீன்களுக்கு பெயர்போனதொரு பகுதியாகும்.
இப்பகுதியில் உள்ள பவளப்பாறைகளை சீனா அழிப்பதாக பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் முன்பு குற்றம் சாட்டினர்.
ஆனால் சீனா இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.