மேல் மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் வழங்கும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
கணனி முறைமையின் புதுப்பித்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதால் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே.சி.என்.பெரேரா தெரிவித்துள்ளார்.
வாகன வருமான உத்தரவுப் பத்திரம் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் காலாவதியாகும் வாகன வருமான உத்தரவுப் பத்திரங்களை அபராதம் செலுத்தாமல் புதுப்பிக்கலாம்.
இணையம் மூலம் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் பெறுவது, இன்று முதல் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.