கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் உருவான கொரோனா என்ற கொடூர நோய் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதும் பரவி இலட்சக்கணக்கான மக்கள் உயிரை காவுகொண்டதை நம்மால் இலகுவாக மறக்க முடியாது.
இந்த தொற்றில் இருந்து உலக நாடுகள் கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு தற்போது தான் வழமை நிலைக்கு திரும்பி உள்ளது. இருந்த போதிலும் கொரோனா முழுமையாக நம்மை விட்டு அகலவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில் சீனாவை அச்சுறுத்தும் வகையில் கொரோனா போன்ற கொடூர தொற்று நோய் மீண்டும் பரவ வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டின் தொற்று நோய் நிபுணர் ஹி சென்க்ஸ் தெரிவித்துள்ளார்.
வௌவால்கள் மூலம் இந்த பெருந்தொற்று வேகமாக பரவும் என அவர் எச்சரித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தலைமையிலான தொற்று நோய் நிபுணர்கள் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.