Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் ஆடு மாடுகளை வாகனத்தில் திருடி வந்த நீண்டகால திருடன் கைது

மட்டக்களப்பில் ஆடு மாடுகளை வாகனத்தில் திருடி வந்த நீண்டகால திருடன் கைது

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் வீதி ஓரத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆடு ஒன்றை பிடித்து வான் ஒன்றில் கடத்திச் சென்ற காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த, நீண்டகாலமாக கால் நடைகளை திருடி வந்த திருடன் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (01) கைது செய்ததுடன் வாகனத்தை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த மாதம் 18 ம் திகதி இருதயபுரம் பகுதியில் உள்ள வீதி ஒன்றின் ஓரமாக 5 ஆடுகள் மேய்ச்சலில் ஈடுபட்டு வந்த நிலையில் சிறிய ரக வான் ஒன்றில் சென்ற திருடன் மேய்ச்சலில் ஈடுபட்ட ஆடு ஒன்றை பிடித்து வானில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளார்.

இதனையடுத்து ஆட்டின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வை. விஜயராஜ் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் சிசிடிவி கமரா மூலம் ஆடை கடத்திய வாகனத்தினை அடையாளம் கண்டு கொண்டனர்.

இதனையடுத்து சம்பவ தினமான நேற்று ஆட்டை கடத்திச் சென்ற திருடனை காத்தான்குடியில் வைத்து கைது செய்ததுடன் ஆட்டை கடத்திய சிறிய ரக வேனையும் மீட்டனர். கைது செய்யப்பட்ட திருடன் நீண்ட காலமாக வாகனங்களில் ஆடு. மாடுகளை திருடி கடத்தி சென்று வருவதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதில் கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

ஜேர்மனி எல்லையில் கைது செய்யப்பட்ட 49 வயதுடைய இலங்கை பிரஜை; இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை
செய்திகள்

ஜேர்மனி எல்லையில் கைது செய்யப்பட்ட 49 வயதுடைய இலங்கை பிரஜை; இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை

October 18, 2026
சட்டத்திற்கு மேலானவர் எவரும் இல்லை; காவி ஆடையும் சட்டத்திற்கு உட்பட்டதே – தம்மரதன தேரர்
செய்திகள்

சட்டத்திற்கு மேலானவர் எவரும் இல்லை; காவி ஆடையும் சட்டத்திற்கு உட்பட்டதே – தம்மரதன தேரர்

October 18, 2026
திரையரங்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு
செய்திகள்

திரையரங்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு

October 18, 2026
அனோஜனுக்காக சவூதி மன்னரிடம் பொதுமன்னிப்பு கோரும் ஜனாதிபதி ஏன் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கக்கூடாது; கம்மன்பில
செய்திகள்

அனோஜனுக்காக சவூதி மன்னரிடம் பொதுமன்னிப்பு கோரும் ஜனாதிபதி ஏன் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கக்கூடாது; கம்மன்பில

October 17, 2026
புலமைப்பரிசில் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின

October 17, 2026
சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் மருத்துவமனையில் அனுமதி
செய்திகள்

சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் மருத்துவமனையில் அனுமதி

October 17, 2026
Next Post
மட்டக்களப்பில் றோட்டராக்ற் டென்னிஸ் போட்டி; 140 சான்றிதழ்கள், 106 கிண்ணங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பில் றோட்டராக்ற் டென்னிஸ் போட்டி; 140 சான்றிதழ்கள், 106 கிண்ணங்கள் வழங்கி வைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு