மட்/ககு/பேத்தாழை விபுலானந்தா கல்லூரியின் பழைய மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் கடந்த 05.09.2026 சனிக்கிழமை பழைய மாணவர்களுக்கான நடைபவனி நிகழ்வுடன் ஆரம்பமாகி, 06.09.2026 ஞாயிற்றுக்கிழமை இறுதி நாள் பரிசளிப்பு விழா நிகழ்வுடன் இனிதே நிறைவுபெற்றது.
இவ்வருடத்திற்கான ஆண்களுக்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டியில், 2016 O/L & 2019 A/L Batch ஆண் மாணவர்கள் முதலாம் இடத்தினைப் பெற்று “Champions” எனும் பட்டத்தை வென்றெடுத்தனர். இரண்டாம் இடத்தினை 2007 O/L & 2010 A/L ஆண் மாணவர்கள் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகப் பெற்றிருந்தனர்.
பெண்களுக்கான எல்லே சுற்றுப் போட்டியில், 2011 O/L & 2014 A/L பெண் மாணவிகள் முதலாம் இடத்தினைப் பெற்று, இவ்வருடத்திற்கான இரண்டாவது தடவையாக “Champions” பட்டத்தை வென்றனர். இரண்டாம் இடத்தினை 2021 O/L & 2024 A/L பெண் மாணவிகள் பெற்றிருந்தனர்.
இந்தப் போட்டிகளில் பல்வேறு Batch-களைச் சேர்ந்த அணிகளும் கலந்துகொண்டு விளையாட்டு நிகழ்வுகளை மேலும் சிறப்பித்திருந்தனர்.














