2024 ஆம் ஆண்டிற்கான தனிநபர்கள்/நிறுவனங்களின் துப்பாக்கி வைத்திருப்பதற்கான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க அக்டோபர் முதல் டிசம்பர் வரை மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சு இன்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டள்ளதாவது,
2024 ஆம் ஆண்டிற்கான தனிநபர்கள் / நிறுவனங்களின் துப்பாக்கி வைத்திருப்பதற்கான அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்தல் அக்டோபர் 01 முதல் டிசம்பர் 31, 2023 வரை நடத்தப்படும். டிசம்பர் 31 ஆம் திகதிக்குப் பிறகு மேற்கொள்ளப்படாது .
குறிப்பிட்ட திகதிக்கு பிறகு செய்யப்படும் எந்தவொரு புதுப்பித்தல்களும் அபராதம் அல்லது சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதுடன், தேவையான விபரங்களை பாதுகாப்பு அமைச்சின் இணையதளமான www.defence.lk இலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கியை வைத்திருப்பது துப்பாக்கிச் சட்டத்தின் 22ஆவது பிரிவின் விதிகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று அமைச்சு எச்சரித்துள்ளது.