வாகன வருவாய் உரிமம் வழங்குவதற்கான புதிய முறை அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த புதிய முறை வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும் இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் இணைந்து புதிய முறைமையை (eRL 2.0) அறிமுகப்படுத்தவுள்ளது.
இதேவேளை அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் பிராந்திய மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகங்களில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வருவாய் உரிமம் பெறுவதற்கான இணையவழி(online) முறையும் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு தற்போதுள்ள முறைமை (eRL 1.0) சில மாற்றங்களுடன் அப்படியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய eRL 2.0 முறையை நடைமுறைப்படுத்துவது இலங்கையின் டிஜிட்டல் வளர்ச்சியை உருவாக்கும் செயற்பாட்டில் மிக் முக்கிய படியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.