ஷிரந்தி ராஜபக்ஷவினால் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முன்பிணை கோரிக்கை இன்று திங்கட்கிழமை (12) நிராகரிக்கப்பட்டுள்ளது.
‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கில் அவர் இந்த முன்பிணை மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு கடந்த 6ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, இந்த விவகாரம் தொடர்பில் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் அறிவித்தல் விடுத்திருந்தது.
இந்நிலையில், இன்று மனு மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஷிரந்தி ராஜபக்ஷவின் முன்பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.








