முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் இன்று (12) இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளனர்.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.
அதேவேளை, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய, பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையானார்.
முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருவரும் ஆணைக்குழுவில் முன்னிலையானமை தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.








