முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தனிப்பட்ட செயலாளர் ஒருவர், பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், கடந்த 2011ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராகப் பணியாற்றிய காலப்பகுதியில், விளம்பரப் பிரசாரம் என்ற போர்வையில் போலியான பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி 1.9 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிதி முறைகேடு தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, இன்றுவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








