மட்டக்களப்பு இந்துக் கல்லூரிக்கும், பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியில் இந்து கல்லூரி வெற்றி பெற்றது.
மட்டக்களப்பின் இரண்டு பிரபல பாடசாலைகள் மோதும் சிகரத்தினை நோக்கி என்னும் தலைப்பிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி நேற்று காலை மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் என்.தனஞ்செயன் கலந்துகொண்டார்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெரியகல்லாறு மத்திய கல்லூரி களத்தடுப்பினை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அணியினர் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 238 ஓட்டங்களை பெற்றனர்.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய பெரியகல்லாறு மத்திய கல்லூரி அணியினர் 29 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 96 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தனர்.
இந்த சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அணியினர் வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவு செய்யப்பட்டனர்.
இதன்போது வெற்றி பெற்ற அணிகளுக்கான வெற்றிக் கிண்ணங்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டதுடன் சம்பியன் கிண்ணங்களும் வழங்கப்பட்டன.
இறுதி போட்டியில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை பேரவையின் செயலாளர் கலாநிதி மு.கோபாலரட்ணம் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.