சம்மாந்துறை சேகப்பற்று வயல் பகுதியில் யானை ஒன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், அதன் உயிரைக் காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த பகுதியில் யானை உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுவதுடன், அதன் நிலைமை தொடர்பில் அதிகாரிகள் தாமதமின்றிக் கவனம் செலுத்த வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதன்படி, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று யானையின் நிலைமையைப் பரிசோதித்து, அதனைப் பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யானை இவ்வாறு ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டதற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே, உரிய அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு யானையின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.









