Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அபராதப் பணத்தைச் செலுத்த முடியாமல் சுமார் 1,500 கைதிகள் சிறையில்

அபராதப் பணத்தைச் செலுத்த முடியாமல் சுமார் 1,500 கைதிகள் சிறையில்

50 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அபராதப் பணத்தைச் செலுத்த முடியாத காரணத்தினால் சுமார் 1,500 கைதிகள் சிறைச்சாலைகளில் உள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன வாய்மொழி விடை எதிர்பார்க்கும் வினாவாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, 10,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரையிலான அபராதத் தொகையைச் செலுத்த முடியாத காரணத்தினால் 421 கைதிகள் சிறையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார,

“கைதிகளின் எண்ணிக்கை 10,611 ஆகும். சந்தேகநபர்களின் எண்ணிக்கை 28,408 ஆகும். வயதுக் குழுக்களின் அடிப்படையில் கைதிகளின் எண்ணிக்கை: 20-30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் 2,160 பேர், 30-40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் 3,423 பேர், 40-50 வயதுக்கு இடைப்பட்டவர்கள் 2,860 பேர், 50-60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் 1,561 பேர், 60-70 வயதுக்கு இடைப்பட்டவர்கள் 601 பேர், 70-80 வயதுக்கு இடைப்பட்டவர்கள் 150 பேர், 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் 11 பேர். அபராதம் செலுத்த வேண்டிய கைதிகளின் மொத்த எண்ணிக்கை 1,454 ஆகும்.

10,000 முதல் 15,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த முடியாமல் 421 பேர் உள்ளனர். 15,000 முதல் 25,000 ரூபாய் வரை செலுத்த முடியாமல் 220 பேர் உள்ளனர். 25,000 முதல் 50,000 ரூபாய் வரை செலுத்த முடியாமல் 361 பேர் உள்ளனர். 50,000 முதல் 100,000 ரூபாய் வரை செலுத்த முடியாமல் 245 பேர் உள்ளனர். ஒரு இலட்சத்திற்கும் அதிகமான அபராதத் தொகையைச் செலுத்த முடியாமல் 207 பேர் உள்ளனர். இதன் மொத்தக் கூட்டுத்தொகை 1,454 ஆகும்.” என்றார்.

குறித்த கைதிகளை விடுவிப்பது தொடர்பான வேலைத்திட்டம் ஏதேனும் அரசிடம் உள்ளதா என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இதன்போது வினவியதற்கு, அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பின்வருமாறு பதிலளித்தார்.

“அபராதத்தைச் செலுத்த முடியாமல் சிறையில் இருக்கிறார்கள் என்பது பெரிய குற்றமாக இருக்க முடியாது. அபராதத்தைச் செலுத்த முடியாத நிலையினாலேயே அவர்கள் உள்ளனர். தற்போதும் கூட பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட கைதிகளின் அபராதத் தொகையைச் செலுத்தி அவர்களை வெளியே எடுக்கும் வேலைத்திட்டம் காணப்படுகிறது. அதேபோல் எதிர்காலத்திலும் எவரேனும் விரும்பினால் அதற்குச் சிறைச்சாலைத் துறை தடை விதிக்காது, எந்தவொரு அரசாங்க அல்லது அரசாங்க சார்பற்ற நிறுவனமும் அந்த நபர்களை வெளியே எடுக்க முடியும்.” என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் சாணக்கியன் சரமாரிக் கேள்வி
செய்திகள்

361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் சாணக்கியன் சரமாரிக் கேள்வி

October 21, 2026
ரோபோ தொழில்நுட்பம் மூலம் புதுடெல்லியில் இருந்து இலங்கையில் செய்த அறுவைச் சிகிச்சை வெற்றி
செய்திகள்

ரோபோ தொழில்நுட்பம் மூலம் புதுடெல்லியில் இருந்து இலங்கையில் செய்த அறுவைச் சிகிச்சை வெற்றி

October 21, 2026
நாளை முதல் மின்வெட்டு இருக்காது; நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் மீண்டும் இயங்கத் திட்டம்!
செய்திகள்

நாளை முதல் மின்வெட்டு இருக்காது; நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் மீண்டும் இயங்கத் திட்டம்!

October 21, 2026
இத்தாலி வன்முறை; 5 ஆண்டுகள் சிறை; 20,000 யூரோ வரை அபராதம் – மெலோனி அறிவிப்பு!
உலக செய்திகள்

இத்தாலி வன்முறை; 5 ஆண்டுகள் சிறை; 20,000 யூரோ வரை அபராதம் – மெலோனி அறிவிப்பு!

October 21, 2026
மெக்கா பள்ளிவாசலில் முத்தமிட்டதற்காக வங்கதேசத்தினரை இரகசியமாக தூக்கிலிட்ட சவுதி அரசு
உலக செய்திகள்

மெக்கா பள்ளிவாசலில் முத்தமிட்டதற்காக வங்கதேசத்தினரை இரகசியமாக தூக்கிலிட்ட சவுதி அரசு

October 21, 2026
பிரகீத் எக்னெலிகொட LTTE உடன் இணைந்து மஹிந்தவை கொலை செய்ய திட்டம் தீட்டினர்; சரத் வீரசேகர
செய்திகள்

பிரகீத் எக்னெலிகொட LTTE உடன் இணைந்து மஹிந்தவை கொலை செய்ய திட்டம் தீட்டினர்; சரத் வீரசேகர

October 21, 2026
Next Post
ரோபோ தொழில்நுட்பம் மூலம் புதுடெல்லியில் இருந்து இலங்கையில் செய்த அறுவைச் சிகிச்சை வெற்றி

ரோபோ தொழில்நுட்பம் மூலம் புதுடெல்லியில் இருந்து இலங்கையில் செய்த அறுவைச் சிகிச்சை வெற்றி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு