Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அந்தமான் தீவுகளை அண்மித்து தாழமுக்கம்; நாட்டில் 27ஆம் திகதி வரை கடும் மழை

அந்தமான் தீவுகளை அண்மித்து தாழமுக்கம்; நாட்டில் 27ஆம் திகதி வரை கடும் மழை

51 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டுக்கு அருகாமையில் அந்தமான் தீவுகளில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் காரணமாக தாழமுக்க நிலைமைகள் உருவாகி வருவதுடன், வெப்பமண்டல இடையிணைவு வலயத்திலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த தாழமுக்கப் பிரதேசம் நாட்டிலி வெள்ளிக்கிழமையும் தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், எதிர்வரும் (27) செவ்வாய்க்கிழமை வரை நாட்டின் பல பகுதிகளிலும் மழையுடனான வானிலை நிலவுமெனவும் குறிப்பாக தென்மேற்கு பகுதியில் அதிக மழை பொழியும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சில பகுதிகளில் நூறு மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி நேற்றுமுன்தினம் புதன்கிழமை பதிவாகியிருந்ததுடன், இந்நிலைமை எதிர்வரும் (27) செவ்வாய்க்கிழமை வரை குறித்த பகுதிகளில் நீடிக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை அண்மித்த கிழக்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பில் இன்று (23) வெள்ளிக்கிழமை மற்றுமொரு தாழமுக்கப் பிரதேசம் உருவாகலாமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாழமுக்கம் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், கடற்படையினர் மற்றும் மீனவர்கள் இது தொடர்பில் வெளியிடப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் விசேட அறிவிப்புகளை அவதானிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்த வானிலை மாற்றத்தால் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் அதிக மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாகாணங்களில் பல பகுதிகளில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதால், தாழ் நிலப் பகுதிகளுக்கு வௌ்ளம் தொடர்பான செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசுவதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படக்கூடும்.

மத்திய மலைநாட்டில் ஹற்றன், நுவரெலியா, கொத்மலை உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக உயர்ந்து வருவதுடன், பல பகுதிகளில் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளது. நோட்டன்பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் அனைத்து வான்கதவுகளிலும் சுமார் ஐந்து அங்குல உயரத்திற்கு நீர் வான்பாய்ந்து வருகிறது. இதனால் களனி கங்கையை அண்மித்து தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு குறித்த நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால், மலைச்சரிவுகளை அண்மித்த பகுதிகளில் வசிப்போர் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பொழியலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. எனவே, வௌ்ளப் பெருக்கு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்கள் முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, கலா ஓயா ஆற்றின் மேல் மற்றும் மத்திய நீரேந்துப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஆற்றை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களம் நேற்று வியாழக்கிழமை வௌியிட்டுள்ள அறிவிப்பின்படி, கலா ஓயாவின் நீர்மட்டம் வெள்ள அபாய மட்டத்தை நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு; நவம்பர் 6 வரை நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு; நவம்பர் 6 வரை நீதிமன்றம் உத்தரவு!

October 23, 2026
இலங்கை சிறைச்சாலைகள் நரகமாக உள்ளன;  நாமல் ராஜபக்ஷ கடும் விமர்சனம்!
செய்திகள்

இலங்கை சிறைச்சாலைகள் நரகமாக உள்ளன; நாமல் ராஜபக்ஷ கடும் விமர்சனம்!

October 23, 2026
ஹோர்முஸ் நீரிணையில் ஒரே நாளில் 7 எண்ணெய் கப்பல்கள் சேதம்!
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் ஒரே நாளில் 7 எண்ணெய் கப்பல்கள் சேதம்!

October 23, 2026
புத்தளம் – அநுராதபுரம் வீதியில் கோர விபத்து; இருவர் பலி; 15க்கும் மேற்பட்டோர் காயம்!
செய்திகள்

புத்தளம் – அநுராதபுரம் வீதியில் கோர விபத்து; இருவர் பலி; 15க்கும் மேற்பட்டோர் காயம்!

October 23, 2026
முன்பள்ளிக் குழந்தைகளுக்குத் தனிப்பயிற்சி வகுப்புகள் நடத்தத் தடை!
செய்திகள்

முன்பள்ளிக் குழந்தைகளுக்குத் தனிப்பயிற்சி வகுப்புகள் நடத்தத் தடை!

October 23, 2026
ஞானசார தேரர் விடுதலைக்காக போராடும் பிக்குமாருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
செய்திகள்

ஞானசார தேரர் விடுதலைக்காக போராடும் பிக்குமாருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

October 23, 2026
Next Post
நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு; நவம்பர் 6 வரை நீதிமன்றம் உத்தரவு!

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு; நவம்பர் 6 வரை நீதிமன்றம் உத்தரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.