இலங்கை புகையிரத திணைக்களம் கடந்த 8 வருடங்களில் 297.64 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ள போதிலும் 52.19 பில்லியன் ரூபா வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, 2015ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை இலங்கை ரயில்வே திணைக்களத்திற்கு 245.45 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த 2021 ஆம் ஆண்டு புகையிரத திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்ட மொத்த செலவினம் 40.41 பில்லியன் ரூபாவாக இருந்ததாகவும், 2022 ஆம் ஆண்டில் செலவு 42.53 பில்லியன் ரூபாவாக அதாவது ஒரு வருடத்தில் 2.12 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவர் கூறுகையில், கடந்த எட்டு ஆண்டுகளில், ரயில்வே துறைக்கு கிடைத்த வருமானத்துடன் ஒப்பிடும் போது, மொத்த செலவினம் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது என்றும், கணக்கு தகவல்களை ஆலோசிக்கும் போது, அந்த தகவல் தெளிவாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.