உலக வரலாற்றில் பதிவான முதலாவது எழுத்தாளர் ஒரு பெண் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். அவர் இற்றைக்கு சுமார் 4300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்.
அதாவது கி.மு 23ஆம் நூற்றாண்டில் இன்றைய ஈராக் பகுதியில் வாழ்ந்த என்ஹதுனா என்ற பெண்ணே இலக்கியம் படைத்திருக்கிறார்.அப்போதுதான் எழுத்து முறை உருவான ஆரம்ப காலப்பகுதி. ஆனால், என்ஹதுனா எழுதிய கவிதை மற்றும் ஆன்மிகக் கதைகள் களிமண் தகட்டில் இன்றும் காணமுடிகிறது.
தனது தந்தையான அகாதின் சர்கோன் ஆட்சி புரிந்த பிராந்தியத்தில் சுமேரிய நகரான ஊர்ரில் வாழ்ந்த என்ஹதுனா நிலவுக் கடவுளான நன்னாவின் தலைமை மத பூசகராக இருந்திருக்கிறார். அப்போது அவரது எழுத்துகள் பல நூற்றாண்டுகளுக்கு செல்வாக்கு செலுத்தியிருக்கிறது.