கடும் மழை காரணமாக பாடசாலைகளுக்கு நாளையும் (05), நாளை மறுதினம் வெள்ளிக்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மாத்தறையில் உள்ள பாடசாலைகளுக்கே இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என தென் மாகாண கல்விப் பணிப்பாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார்.
கனமழை காரணமாக பல தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மாத்தறை, அக்குரஸ்ஸ பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளில் கல்வி பயலும் மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்படி, பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகள் மீளத் திறப்பது தொடர்பில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே ஆகியோர் தலைமையில் நேற்று (04) மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.