Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அந்தோனியாருடன் புத்தரை குடியமர்த்துவத்தின் பின் விளைவுகள்; கச்சதீவு தொடர்பில் முழு விபரம்! – (கட்டுரை)

அந்தோனியாருடன் புத்தரை குடியமர்த்துவத்தின் பின் விளைவுகள்; கச்சதீவு தொடர்பில் முழு விபரம்! – (கட்டுரை)

3 years ago
in சிறப்பு கட்டுரைகள்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள சர்ச்சைக்குரிய தீவான கச்சதீவில் புத்தர் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சுமத்தி வருகின்றனர். எனினும், கச்சத் தீவில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்படவில்லை என இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவிக்கின்றார். புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதை கடற்படை நிராகரித்தாலும், கச்சதீவில் புத்தர் சிலை காணப்படும் வகையிலான புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது. இந்நிலையில், மத நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாக விளங்கும் கச்சத்தீவில் புத்தர் சிலை அமைக்கும் சிங்கள கடற்படையினரின் போக்கை உடனடியாகத் தடுத்து நிறுத்தி புத்தர் சிலைகளை அகற்ற இந்திய அரசு இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும் என இந்திய பக்தர்கள் மற்றும் இரு நாட்டு பங்குத் தந்தைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

‘இரும்புத் தகடுகளைத் தேடிச் சென்றபோது கண்ணில் பட்ட புத்தர் சிலைகள்” இதுகுறித்து நெடுந்தீவு பங்குதந்தை வசந்தன் பேசுகையில், “இந்திய இலங்கை மக்களின் மத நல்லிணக்கத்திற்குச் சான்றாக உள்ள புனித அந்தோனியார் கோவில் மட்டுமே கச்சத்தீவில் இருந்து வந்த நிலையில் தற்போது இலங்கை கடற்படை வீரர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்டுள்ள கடற்படை தளத்திற்கு எதிரே இரண்டு புத்தர் சிலைகள் வைக்கப்பட்டு விகாரை கட்டப்பட்டுள்ளதாக” கூறினார்.மேலும், “இந்த விகாரை கடந்த 3 ஆண்டுகளுக்குள் கட்டப்பட்டதாக இருக்கலாம். இந்த ஆண்டு வருடாந்திர திருவிழா முடிந்த மறு நாள் நெடுந்தீவில் இருந்து திருவிழாவிற்காக எடுத்து வந்த இரும்புத் தகடுகள் சிலவற்றைக் காணவில்லை. அதைத் தேடிச் சென்ற போது விகாரை இருப்பதை முதலில் நான் பார்த்து எனது செல்போனில் போட்டோ எடுத்துக் கொண்டேன். கச்சத்தீவில் அரச மரம் இல்லாத நிலையில் இலங்கையில் இருந்து அரச மரக் கன்றுகள் கொண்டுவரப்பட்டு கச்சத்தீவில் வைத்து அரச மரத்தை வளர்த்து, அதற்குப் பிறகு தற்போது அங்கு 3 அடி உயரத்தில் சிலையுடன் கூடிய விகாரை மற்றும் 5 அடி உயரத்துடன் விகாரை என இரண்டு விகாரை கட்டப்பட்டுள்ளது,” என்று கூறினார் வசந்தன். கச்சத்தீவு புனித அந்தோனியார் கோவில் திரு விழாக்கு வரும் பங்குத் தந்தைகள் மற்றும் பக்தர்கள் யாரும் புத்தர் சிலையைப் பார்த்துவிடக் கூடாது என்ப தற்காக பனை ஓலைகளால் நான்குபுறமும் உயரமாக தடுப்புகள் வைத்து மறைக்கப்பட்டுள்ளதாக வசந்தன் கூறுகிறார். இந்த ஆண்டு திருவிழாவிற்குச் சென்ற இந்திய இலங்கை பங்குத் தந்தைகள் அந்தப் பகுதிக்குச் செல்ல இலங்கை கடற்படை வீரர்கள் அனுமதி மறுத்ததால் பங்குத் தந்தைகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பெயரில் விசாரித்தபோது அங்கு புத்த விகாரை கட்டப்பட்டுள்ளது தெரிய வந்தது.

“கச்சத்தீவில் நிறுவப்பட்டுள்ள புத்த விகாரையால் மத நல்லிணக்கம் பாதிக்கப்பட்டு அனைத்து மதத்தினரும் தங்களின் சுவாமி சிலைகளை வைத்து வழிபடத் தொடங்கினால் கச்சத்தீவில் எதிர்வரும் காலங்களில் மதமோதல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.தற்போது அமைந்துள்ள புத்தர் சிலையால் காலம்காலமாக இரு நாட்டு பக்தர்களும் வழிபடும் கச்சத்தீவு புனித அந்தோணியார் வரலாறு மறைக்கப்பட்டு,மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது.கச்சத்தீவில் அமைந்துள்ள புத்த விகாரை யாரும் பார்க்காத அளவு உயரமான தட்டிகளைக் கொண்டு மறைத்து வைத்திருப்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது. இலங்கை கடற்படை உடனடியாக உண்மையை மக்கள் மத்தியில் தெரிவிக்கவேண்டும்,” என்று வசந்தன் தெரிவித்தார். அதோடு, “புத்த விகாரை அமைத்திருப்பது கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய பக்தர்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக புத்த சிலைகள் கச்சத்தீவில் இருந்து அகற்றவேண்டும்,” என்று பங்குத் தந்தை வசந்தன் தெரிவித்தார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் வெளியான தகவல் கச்சத்தீவில் புத்தர் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக தமிழ் அரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றத்தில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.’கச்சத்தீவில் இவ்வளவு காலமாக அந்தோனியார் ஆலயம் மாத்திரம் காணப்பட்டது. தற்போது அங்கு மிகப் பெரியதொரு புத்தர் சிலை எப்படி வந்தது என்பது தான் கேள்வியாக இருக்கின்றது. இன்று இலங்கையில் உள்ளவர்களுக்கும் தமிழ் நாட்டில் இருக்கின்றவர்களுக்கும், கச்சதீவு அந்தோனி யார் ஆலயத்திற்கு சொந்தமான இடம் என்று தெரியும். மீனவர்கள் அங்கு சென்று வருவது, வழிபடுவது வழமையான விடயம். ஆனால், வடக்கு கிழக்கு பகுதிகளில் அதிகளவான பௌத்த அடையாளங்களை நிறுவி வருகின்றது படைத்தரப்பு. கச்சத்தீவில் மிகப் பெரிய புத்தர் சிலையை கடற்படை நிறுவியுள்ளது. கச்சதீவையும் விட்டு வைக்காத ஒரு நிலையாக இருக்கின்றமையை நான் இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்பு கின்றேன்.ஆனால், கேட்டால் சொல்வார்கள், கடற்படை வழிபடுவதற்காக அங்கு சிலை வைக்கப்பட்டதாக அரசாங்கத்திலிருந்து பதில் வரும். இதை உடனடியாக அகற்ற வேண்டும்,” என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவிலான பௌத்த அடையாளங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக தமிழர் தரப்பு தொடர்ச்சியாகக்குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றது. குறிப்பாக யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் வெடியரசன் கோட்டையில் தமிழர் பண்பாட்டு, மரபியல் அடையாளமாகப் பேணப்பட்டு வரும் விஷ்ணுபுத்திர வெடியரசன் கோட்டையை பௌத்த தாதுகோபுரத்தின் எச்சமாக நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அண்மையில் தமிழ் அரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எழுதிய கடிதத்திலேயே அவர் இதைக் குறிப்பிட்டிருந்தார். நீண்டதோர் யுத்தத்தின் நேரடி விளைவுகளை எதிர்கொண்டு, அதிலிருந்து மீண்டெழ முடியாது தவிக்கும் தமிழ் மக்களது இன, மத, மொழி மற்றும் பண்பாட்டு அடையாளங்கள் அடியோடு அழிக்கப் பட்டு அல்லது அந்த அடையாளங்களின் முக்கியத்துவமும் தொன்மமும் வலிந்து மறைக்கப்பட்டு அத்தகைய தொல்லிடங்களில் சிங்கள பௌத்த அடையாளங்க ளான விகாரைகளையும் புத்தர் சிலைகளையும் துறவிமடங்களையும் அமைக்கும் நடவடிக்கைகள் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் மிக முனைப்போடு செயலுருப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.வெடுக்குநாறி மலை, குருந்தூர் மலை, நிலாவரை,
நாவற்குழி, மயிலிட்டி, மண்ணித்தலை, உருத்திரபுரம், கச்சதீவு, கன்னியா வெந்நீரூற்று என நீளும் இந்த
ஆக்கிரமிப்புப் பட்டியல் தற்போது நெடுந்தீவின் வெடியரசன் கோட்டை வரை தனது ஆக்கிரமிப்பின்
கால்களை ஆழப் பதித்துள்ளமை, இலங்கைத் தீவிலுள்ள தமிழர்களின் இயல்பு வாழ்வு குறித்த அச்சத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.பௌத்தம் என்பது ஒரு மத அடையாளமே அன்றி சிங்கள இனத்துக்கான அடையாளம் அல்ல என்பதை அடியோடு மறுத்து தமிழினத்தின் மீது கட்டமைக்கப்பட்ட பண்பாட்டுப் படுகொலையை நிகழ்த்துவதென்பது, இந்த நாட்டின் ஆட்சியாளருடைய தாராளவாதம் மீது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவிக்கின்றார்.

தொடர்புடையசெய்திகள்

தமிழர்களின் தொன்மை தொடர்பில் சிங்களத்தில் தயாரிக்கப்பட்ட ஆவணத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு
சிறப்பு கட்டுரைகள்

தமிழர்களின் தொன்மை தொடர்பில் சிங்களத்தில் தயாரிக்கப்பட்ட ஆவணத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு

April 26, 2026
ஈரான், நேட்டோ, மற்றும் மறைமுக நிழல் மோதல்கள்; ஒரு ஆழமான பார்வை
உலக செய்திகள்

ஈரான், நேட்டோ, மற்றும் மறைமுக நிழல் மோதல்கள்; ஒரு ஆழமான பார்வை

April 6, 2026
இஸ்ரேலை நோக்கிய இன்னுமொரு அச்சுறுத்தல்
சிறப்பு கட்டுரைகள்

இஸ்ரேலை நோக்கிய இன்னுமொரு அச்சுறுத்தல்

March 28, 2026
எரிபொருள் சிக்கல் நீளுமா? ; உலகளாவிய பதற்றத்தின் பின்னணி!
காணொளிகள்

எரிபொருள் சிக்கல் நீளுமா? ; உலகளாவிய பதற்றத்தின் பின்னணி!

February 28, 2026
எப்ஸ்டீன் கோப்புகள் (Epstein Files) – சிறு விளக்கம்; 188 இடங்களில் இலங்கை எனும் பெயர்
உலக செய்திகள்

எப்ஸ்டீன் கோப்புகள் (Epstein Files) – சிறு விளக்கம்; 188 இடங்களில் இலங்கை எனும் பெயர்

February 6, 2026
கிவுல் ஓயாவும், மயிலத்தமடு மகாவலி அபிவிருத்தியும்!-ஆபத்தை உணராத மட்டக்களப்பு பண்ணையாளர்கள்!
சிறப்பு கட்டுரைகள்

கிவுல் ஓயாவும், மயிலத்தமடு மகாவலி அபிவிருத்தியும்!-ஆபத்தை உணராத மட்டக்களப்பு பண்ணையாளர்கள்!

January 29, 2026
Next Post
சிறுவர் இல்லத்தை அடித்து நொறுக்கிய மாணவர்கள்!

சிறுவர் இல்லத்தை அடித்து நொறுக்கிய மாணவர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.