Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழர்களின் தொன்மை தொடர்பில் சிங்களத்தில் தயாரிக்கப்பட்ட ஆவணத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு

தமிழர்களின் தொன்மை தொடர்பில் சிங்களத்தில் தயாரிக்கப்பட்ட ஆவணத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு

3 months ago
in சிறப்பு கட்டுரைகள், செய்திகள், முக்கிய செய்திகள்

​தென்னிந்தியா, இலங்கை மற்றும் அதன் அண்டை பிராந்தியங்களில் வாழும் தமிழ் சமூகத்தினர், உலகின் தொன்மையான உயிருள்ள கலாச்சாரத்தின் மக்களாவார்.

​அவர்களின் மொழியான தமிழ் 2000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது. அதேபோல் அவர்களின் இலக்கியங்கள் மற்றும் பாரம்பரியங்கள் மிகவும் பழமையானவை. ஆனால், தலைமுறை தலைமுறையாகத் தீர்க்கப்படாத ஒரு கேள்வி இருந்தது.

“​தமிழர்கள் எங்கிருந்து வந்தார்கள்?”

மிகவும் பிரபலமான கருத்தாக இருந்தது என்னவென்றால், அவர்களுக்கு வட இந்தியர்களை விட வேறுபட்ட ஒரு தனித்துவமான அடையாளம் இருக்கிறது என்பதாகும். அவர்களின் தோற்றம் நீண்ட காலமாக கட்டுக்கதைகளாலும் அரசியல் கருத்துக்களாலும் மறைக்கப்பட்டிருந்தது.

​ஆனால், நவீன மரபியல் (Genetics) அவர்களின் தோற்றம் குறித்து வியக்கத்தக்க மற்றும் சிக்கலான ஒரு கதையைக் கூறுகிறது. அதாவது, அவர்களின் ஆரம்பத்தை ஆப்பிரிக்காவிலிருந்து வெளியே வந்த முதல் மனிதர்களுடன் தொடர்புபடுத்தும், மற்றும் மறைந்து போன சிந்து சமவெளி நாகரிகத்துடன் தொடர்புபடுத்தும், அதேபோல் மரபியல் ரீதியாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த விபரங்கள் இப்போது வெளிவந்துள்ளன.

​தமிழ் மக்களின் மரபணுக்களை அடையாளம் காண்பதற்காக நாம் நவீன மனிதனின் ஆரம்பக் காலத்திற்குச் செல்வோம்.

​ஆப்பிரிக்காவில் உருவான நவீன ஹோமோ சேபியன்ஸ் மனிதர்கள் ஆப்பிரிக்காவிற்கு வெளியே பயணிக்கத் தொடங்கினர். அது சுமார் 70,000 ஆண்டுகளுக்கு முன்பு. அவர்கள் இந்தியாவிற்கு வருவது தோராயமாக 50,000 முதல் 65,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆகும்.

​அவர்கள் நாடோடி வாழ்க்கை முறையைப் பின்பற்றிய ஒரு மக்கள் குழுவாகும். அதாவது வேட்டையாடியும் பொருட்களைச் சேகரித்தும் வாழ்ந்தார்கள்.

​ஆசியாவின் தெற்குக் கடற்கரை ஓரமாகப் பயணித்த இந்த நவீன மனிதர்கள், சிந்து மற்றும் குஜராத் பகுதிகள் வழியாக இந்தியத் துணைக் கண்டத்திற்குள் நுழைந்தனர்.

​அவர்களே இந்தியத் துணைக் கண்டத்தின் முதல் குடியிருப்பாளர்களாவர். மரபியல் விஞ்ஞானிகள் அவர்களை ‘பண்டைய தென்னிந்திய மூதாதையர்கள்’ (Ancient Ancestral South Indians) அல்லது AASI என்று அழைக்கிறார்கள்.

​இந்த முதல் மனிதர்களின் மரபணு எச்சங்கள் இன்றும் இந்தியாவில் வாழும் இருளர் மற்றும் பனியர் போன்ற சுதேச பழங்குடி மக்களிடம் காணப்படுகின்றன.

​அந்த மக்களே(AASI) தமிழ் மக்களின் மரபணு தொடர்ச்சியின் முதல் விதையாக இருக்கிறார்கள். அதாவது தமிழர்களே இந்தியாவின் முதல் நேரடி வம்சாவளியினர்.

​கி.மு. 4700 முதல் 3000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், ‘பண்டைய ஈரானிய விவசாயிகள்’ (Ancient Iranian Farmers) என்ற ஒரு மக்கள் குழு இந்தியாவிற்கு வருகிறார்கள். அவர்கள் ஜாக்ரோஸ் மலைத்தொடருக்குச் சொந்தமானவர்கள் மற்றும் புதிய கற்காலத்தைச் சேர்ந்த மக்கள் குழுவினர்.

​இந்த நேரத்தில் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த AASI மக்களுடன் இவர்கள் கலக்கிறார்கள்.
​இந்த இரு குழுக்களின் இணைப்பால் உருவான மக்களே மிகவும் செழிப்பான நாகரிகமான சிந்து சமவெளி நாகரிகத்தை உருவாக்கினார்கள். சிந்து சமவெளி நாகரிகத்தின் மக்கள் திராவிடர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

​இவர்கள் பேசிய மொழி ‘புரோட்டோ திராவிடம்’ (Proto-Dravidian) எனக் கருதப்படுகிறது. அதாவது அது இன்றைய திராவிட மொழிகளின் மூல விதையாகும்.

​கி.மு. 2000 அளவில் சிந்து சமவெளி நாகரிகம் அழியத் தொடங்கியது. அங்கிருந்த மக்களிடமிருந்து ஒரு பெரிய அலை தெற்கு நோக்கி இடம்பெயரத் தொடங்கியது.

​அவர்கள் தென்னிந்தியப் பிராந்தியத்தில் இருந்த ASI மக்கள், அதாவது ஆப்பிரிக்காவிலிருந்து வந்த முதல் மனிதர்களின் வம்சாவளியினருடன் மீண்டும் கலக்கத் தொடங்கினர்.

​இந்த கலப்பால் உருவான புதிய மக்கள் குழு ‘பண்டைய தென்னிந்திய மூதாதையர்கள்’ அல்லது AASI என்று அழைக்கப்படுகிறது.

​இவ்வாறு நாட்டின் உட்பகுதிக்குச் சென்ற திராவிடர்கள் நான்கு பகுதிகளாகப் பிரிகிறார்கள். வட திராவிடர்கள், மத்திய திராவிடர்கள், தெற்கு திராவிடர்கள் 1 மற்றும் தெற்கு திராவிடர்கள் 2 எனப் பிரிகின்றார்கள்.

​வட திராவிடர்கள் கிழக்கு இந்தியாவிற்குச் சென்றனர். அவர்களில் பெரும்பாலான குழுக்கள் மீண்டும் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு அருகிலேயே குடியேறினர். மத்திய திராவிடர் குழு மத்திய இந்தியாவை நோக்கிச் சென்றது.

​தெற்கு திராவிடர் 1 குழு சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து தென்னிந்தியப் பிராந்தியத்தை நோக்கிச் சென்றது. அவர்கள் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் பகுதிகள் வழியாகப் பயணித்தனர். இந்த மக்கள் பிரிவை இன்றைய தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மக்களாக அடையாளம் காண முடியும்.

​தெற்கு திராவிடர்கள் 2 என அடையாளம் காணப்படும் மக்கள் குழு, இந்தியாவின் தெற்கு நோக்கி கங்கைச் சமவெளி வழியாகச் செல்கிறார்கள். அவர்கள் இன்றைய தெலுங்கு மக்களாக அடையாளம் காணப்படுகிறார்கள்.

​கி.மு. 2000 வரை தெற்கு திராவிடர்கள் ‘புரோட்டோ தமிழ்-தெலுங்கு’ மக்களாகவே இருந்தனர்.

​கி.மு. 1500 அளவில் இந்த இரு குழுக்களும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிகின்றன. அதன் பிறகு தமிழ் மக்கள் ‘பிரீ-தமிழ்’ (Pre-Tamil) என்று அழைக்கப்பட்டனர். தெலுங்கு மற்றும் கோண்டி மக்கள் கி.மு. 1000 அளவில் ஒன்றிலிருந்து ஒன்று பிரிகிறார்கள்.

​தமிழ் மற்றும் கன்னட மக்கள் கி.மு. 600 அளவில் பிரிகிறார்கள். தமிழ் மற்றும் மலையாள மக்கள் கி.பி. 600 போன்ற அண்மைக் காலத்திலேயே பிரிகிறார்கள்.

​தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகியவை பழமையான மொழிகளாகக் கருதப்படுகின்றன. மிகவும் நவீனமான மொழியாக மலையாளம் கருதப்படுகிறது. சிந்து சமவெளி மக்களின் மரபணுக்கள் தென்னிந்திய மக்கள் தொகையில்தான் அதிகம் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.

​கி.மு. 1500 அளவில் மற்றொரு முக்கியமான நிகழ்வு நடக்கிறது. அதாவது யூரேசிய புல்வெளி (Eurasian Steppe) பகுதியிலிருந்து ‘புல்வெளி மேய்ப்பர்கள்’ (Steppe Pastoralists) என்ற இந்தோ-ஆரிய மொழிகளைப் பேசும் ஒரு மக்கள் குழு இந்தியாவிற்கு வருகிறார்கள்.

​அவர்கள் வட இந்தியாவில் அப்போது எஞ்சியிருந்த சிந்து சமவெளி மக்களுடன் கலக்கிறார்கள். இந்த கலப்பால் உருவான புதிய மக்கள் குழு ‘பண்டைய வட இந்திய மூதாதையர்கள்’ அல்லது ANI என அழைக்கப்படுகிறது.

​இந்த ஆரிய குடியேற்றத்தால் வட இந்தியா பெரும் மாற்றத்திற்கு உள்ளானது. ஆனால், தென்னிந்தியா தமிழ் மக்களின் பழைய சுதேச பாரம்பரியங்களின் கோட்டையாகத் திகழ்ந்தது.

​சிறிய அளவிலான மரபணுப் பரிமாற்றம் நடந்தாலும், இந்தோ-ஆரியர்களின் குடியேற்றத் தாக்கம் வடக்கை விட தெற்கில் மிகக் குறைவாகவே இருந்தது.

​இது இந்தியாவிற்குள் ஒரு பெரிய மரபணுப் பிரிவை உருவாக்கியது. அதாவது ANI மற்றும் ASI மக்களுக்கிடையில். இதனால்தான் தமிழ் மக்களை மரபியல் ரீதியாக ஒரு தனித்துவமான இனமாக அடையாளம் காண முடிகிறது.

​இந்த மரபணு ரீதியாக ஏற்பட்ட தனிமைப்படுத்தல் மற்றும் கலப்பு ஏற்படாதது, அவர்களின் பண்டைய திராவிட மொழி மற்றும் கலாச்சாரத்தைத் தொடர்ந்து கொண்டு செல்வதற்குக் காரணமாக அமைந்தது.
​அதேபோல் அவர்களின் தனித்துவமான மரபணு சுயவிவரம் கலக்காமல் இருப்பதற்கும் இது காரணமாகி இருக்கிறது. எனவே தமிழ் இனத்தின் எந்தவொரு அண்மைக் கால தலைமுறையும் எதனோடும் சேருவதில்லை.
​
அவர்களின் DNA அந்தமான் தீவுகளின் ஓன்கே (Onge) மக்கள், இலங்கையின் சுதேச வேடுவ மக்கள் மற்றும் ஆஸ்திரேலியாவின் பூர்வீக குடிமக்களுடன் (Aborigines) ஒற்றுமையைக் காட்டுகிறது.

​அந்தத் தொடர்பு ஆப்பிரிக்காவிலிருந்து வந்த முதல் மனிதர்களுடன் கொண்ட நேரடித் தொடர்பாகும். அதேபோல் இது பின்னர் வந்த வெளியாட்களுடன் அல்லாமல், வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியாவின் பழைய மனிதர்களுடன் கொண்ட நேரடித் தொடர்பு.

​அதாவது இது எழுதப்பட்ட ஆவணங்களை விட மிகவும் பழமையான தொடர்பு. இதனால்தான் அவர்கள் வரலாற்று ரீதியாக மிகவும் முக்கியமான ஒரு இனமாக மாறியிருக்கிறார்கள்.

​தென்னிந்தியாவில் உள்ள திராவிட மக்கள் கலப்பின்றித் தொடர்வதற்குச் சில காரணங்கள் உள்ளன. அதற்குப் புவியியல் அமைப்பு மிக முக்கியமானது.

​வட இந்தியாவையும் தென்னிந்தியாவையும் விந்திய மற்றும் சாத்பூரா போன்ற மலைத்தொடர்கள் ஒன்றிலிருந்து ஒன்று பிரித்திருக்கின்றன. இதனால் வடக்கு-தெற்கு இடையிலான மக்கள் இடமாற்றம் குறைவாக இருந்தது.

அதேபோல் இந்தியச் சமூகத்தில் ஒரே சாதி அல்லது ஒரே குழுவிற்குள் மட்டுமே திருமணங்கள் நடந்தன(அகமுறை). இது சுமார் 2000 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்தது.

​இதற்கு இந்தியாவில் இருந்த சாதி முறையும் ஒரு வலுவான காரணம். இதனால் தென்னிந்திய மக்களின் மரபணுக்கள் கலப்பின்றி தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டன.

​தென்னிந்தியர்களின் DNA ஆய்வின் மூலம் பண்டைய மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் மற்றும் அவர்கள் எவ்வாறு வேறுபடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

​உதாரணமாக, AASI மக்கள் இந்தியாவின் வெப்பமான காலநிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டதைக் கூறலாம் (மேம்பட்ட வியர்வை சுரப்பிகள் மற்றும் பல்வேறு நோய்களுக்கான எதிர்ப்புத் திறன் போன்றவை).
​அவர்களின் DNA முற்றிலும் கலப்பற்றது என்று சொல்ல முடியாது. அவர்களின் DNA-வில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு கலந்த ஈரானிய விவசாயிகளின் DNA-வுடன், மிகச் சிறிய அளவில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு வந்த இந்தோ-ஆரியர்களின் DNA-வும் காணப்படுகிறது.

​இருப்பினும் அது வட இந்திய மக்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த சதவீதமே ஆகும்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

July 21, 2026
பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!
செய்திகள்

பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!

July 21, 2026
30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!
செய்திகள்

30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!

July 21, 2026
செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

July 21, 2026
கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!
செய்திகள்

கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!

July 21, 2026
இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!
செய்திகள்

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!

July 21, 2026
Next Post
பெண்களைத் துப்பாக்கி காட்டி அச்சுறுத்தியதாக அர்ச்சுனா மீது குற்றச்சாட்டு

பெண்களைத் துப்பாக்கி காட்டி அச்சுறுத்தியதாக அர்ச்சுனா மீது குற்றச்சாட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.