யாழில் முச்சக்கர வண்டி சாரதிகள் இன்றையதினம் கண்டனப் பேரணியொன்றை மேற்கொண்டனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிக் மீ(Pick Me) செயலி மூலம் முச்சக்கர வண்டி சேவையினை மக்கள் பயன்படுத்தி வருவதன் காரணமாக, நீண்ட காலமாக முச்சக்கர வண்டியினை தமது வாழ்வாதாரமாக கொண்டு செயல்படும் தமக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று காலை பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகிய முச்சக்கர வண்டிகளின் பேரணி யாழ் நகர் வழியாக கடற்தொழில் அமைச்சரின் அலுவலகத்தை அடைந்து தமது பிரச்சினைகள் தொடர்பில் மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர்.
குறித்த போராட்டத்தில் முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.