பொலிஸ் மா அதிபர் சீ.டி.விக்ரமரத்னவின் பதவிக் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் மா அதிபர் பதவியில் மேலும் மூன்று வாரங்கள் பதவி வகிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கியுள்ளார்.
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் வெளிநாட்டு விஜயமொன்றில் இருப்பதுடன், ஜனாதிபதி நாளைய தினம் சீனாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் இருவரும் நாடு திரும்பி தீர்மானம் ஒன்றை எடுக்கும் வரையில் பொலிஸ் மா அதிபர் பதவியில் சீ.டி.விக்ரமரட்னவை தொடர்ந்தும் நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொலிஸ் மா அதிபரின் பதவிக் காலம் மூன்றாவது முறையாக நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 35ம் பொலிஸ் மா அதிபராக கடந்த 2020ம் ஆண்டு சீ.டி.விக்ரமரட்ன பதவி ஏற்றுக்கொண்டதுடன் கடந்த மார்ச் மாதம் 25ம் திகதி அவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ளவிருந்தார்.
எனினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே இரண்டு தடவைகள் பொலிஸ் மா அதிபருக்கு, தலா மூன்று மாதங்கள் என்ற அடிப்படையில் பதவி நீடிப்பு வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.