இஸ்ரேலின் டெல்அவியில் சர்வதேச ஊடகவியலாளர்கள் மீது இஸ்ரேலிய பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டதாக சர்வதேச செய்தி தகவல் வெளியிட்டுள்ளது.
சர்வதேச செய்தியாளர்களும் அவர்களது அராபிய பிரிவின் குழுவினரும் ஹோட்டலிற்கு சென்றுகொண்டிருந்தவேளை அவர்களது வாகனத்தை மறித்த இஸ்ரேலிய பொலிஸார் ஊடகவியலாளர்களை வாகனத்திலிருந்து பலவந்தமாக இறக்கி அவர்களை சோதனையிட்டுள்ளனர்.
செய்தியாளர்கள் தாங்கள் யார் என்பதை உறுதிப்படுத்தியதாகவும் இந்த சம்பவத்தை படம்பிடிக்க முயன்றவேளை பொலிஸார் கையடக்கதொலைபேசிகளை பறித்து நிலத்தில் வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்அவியிலிருந்து செயற்படும் எங்கள் அராபிய பிரிவினர் ஊடகம் என தெளிவாக குறியிடப்பட்ட வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்தவேளை இஸ்ரேலிய பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா இஸ்ரேல் மோதல்கள்தொடர்பில் செய்தியாளர்கள் சுதந்திரமாக செய்திகளை வெளியிடும் சூழல் அவசியம் என பிபிசியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.