இந்நாட்களில் பரவி வரும் Viral Conjunctivitis எனும் கண் நோய் பரவுவதைத் தடுக்க இயன்றவரை நெரிசலான இடங்களிலிருந்து விலகி இருப்பதும் நோயாளிகளுடன் தொடர்பைத் தவிர்ப்பதும் அவசியம் என தேசிய கண் மருத்துவமனை பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர். எம்.தௌபீக் தெரிவிக்கிறார்.
கண் சிவத்தல், கண்களில் வலி, கண்களைத் திறப்பதில் சிரமம், கண்ணீர், கண்களில் நீர் வடிதல், வெளிச்சத்தைப் பார்ப்பதில் சிரமம் போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாகவும் என வைத்தியர் சுட்டிக்காட்டினார்.
நோயின் ஆரம்ப கட்டத்தில், கண் அரிப்பு போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன, குறிப்பாக இந்த நோயாளிகளில், நோயுற்ற கண்ணின் வெளியேற்றம், ஆரோக்கியமான கண் தொடர்பு ஆகியவற்றால் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் எனவும் மேலும் அவர் கேட்டுக் கொண்டார்.