உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 69 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று (15.10.2023) இடம்பெற்றது.
அருண்ஜேட்லி மைதானத்தில் நேற்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகிய இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 284 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிகபட்சமாக 80 ஓட்டங்களை பெற்றதுடன் 58 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் அடீல் ரஷீத் 3 விக்கெட்டுக்களையும் மார்க் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். இதன்படி இங்கிலாந்து அணிக்கு 285 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பின்னர் 285 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 40.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 215 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஹாரி ப்ருக் அதிகபட்சமாக 66 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் முஜாப் மற்றும் ராஷிட் கான்3 விக்கெட்டுக்களையும்2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.