பொரளை கனத்த மயான சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் ஒன்று வீழ்ந்ததில் 7 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரம் முறிந்து வீழ்ந்துள்ளமையினால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை அகற்றி போக்குவரத்து வழமைக்கு திரும்புவதற்கான முயற்சிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.



