காசாவில் ஐ.நா. நிவாரண அகதிகள் முகாமாக பயன்படுத்திய பாடசாலை மீது இஸ்ரேல் விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது.
அல்-மகாஸி என்ற இடத்தில் இருந்த அந்த பாடசாலையில் 4 ஆயிரம் பலஸ்தீனர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தததாக ஐ.நா. கூறியுள்ளது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாகவும் பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரண முகமை தெரிவித்துள்ளது.
இது மூர்க்கத்தனமானது. இது பொதுமக்களின் உயிர் மீதான அப்பட்டமான அலட்சியத்தை காட்டுகிறது. காஸாவில் ஐ.நா. நிவாரண முகமையின் இடம் உட்பட எந்தவொரு இடமும் பொதுமக்களுக்கு பாதுகாப்பானது இல்லை என்பதை இது உணர்த்துகிறது.” என்று அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.