Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொதுமக்களால் தடுத்து வைக்கப்பட்ட அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்!

பொதுமக்களால் தடுத்து வைக்கப்பட்ட அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்!

3 years ago
in செய்திகள்

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம தலைமையில் நேற்று நடைபெறவிருந்த விசேட முகாமைத்துவக் குழு கூட்டம் குழப்பநிலை காரணமாக பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த கூட்டம் நேற்று கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் காலை 9 மணியளவில் ஆரம்பமாக இருந்த நிலையில் கல்முனை உப பிரதேச செயலகத்திற்கு முதலில் சென்ற அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம அங்கு ஒன்று கூடிய பொதுமக்களினால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு கல்முனை தலைமையக பொலிஸார் வருகை தந்து பொதுமக்களிற்கு அறிவுறுத்தல்களை வழங்கிய போதிலும் அங்கு ஒன்று கூடிய மக்கள் உப பிரதேச செயலகத்திற்கான அதிகாரங்கள் தொடர்பில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருடன் பிரஸ்தாபித்தனர்.

இதனை தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் விசேட முகாமைத்துவக் குழு கூட்டம் ஒன்றினை மேற்கொண்டு இதற்கான தீர்வொன்றினை பெற முயற்சிப்பதாக பொதுமக்களிடம் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அம்பாறை மாவட்ட செயலாளர் கல்முனை உப பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ் உடன் காணப்பட்டார்.

பின்னர் அவ்விடத்தில் இருந்து அருகில் உள்ள கல்முனை பிரதேச செயலகத்திற்கு சென்ற அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் கல்முனை பிரதேச செயலாளர் ஜெ.லியாகத் அலி தலைமையிலான அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடி அவ்விடத்தில் இருந்து சென்றிருந்தார்.

இதே வேளை கல்முனை பிரதேச செயலகம் கல்முனை உப பிரதேச செயலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் எழுந்துள்ள முரண்பாடுகளினால் இரு தரப்பினரும் வழக்குத் தாக்கல் மேற்கொண்டுள்ளதுடன் வழக்கு விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

டியூஷன் மாணவிகளை பின்தொடர்ந்து தொந்தரவு செய்த இளைஞர்கள் கைது; 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

டியூஷன் மாணவிகளை பின்தொடர்ந்து தொந்தரவு செய்த இளைஞர்கள் கைது; 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

August 3, 2026
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி
செய்திகள்

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி

August 3, 2026
நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கும் மண் மண்சரிவு எச்சரிக்கை
செய்திகள்

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கும் மண் மண்சரிவு எச்சரிக்கை

August 3, 2026
வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது
காணொளிகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது

August 2, 2026
மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி
செய்திகள்

மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி

August 2, 2026
தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை
செய்திகள்

தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை

August 2, 2026
Next Post
மனச்சாட்சியற்ற விதத்தில் நடந்துகொள்ளும் இரு அமைச்சர்; சபாநாயகர் சீற்றம்!

மனச்சாட்சியற்ற விதத்தில் நடந்துகொள்ளும் இரு அமைச்சர்; சபாநாயகர் சீற்றம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு