மட்டக்களப்பு மண்முனைவடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம பகுதிகளில் அவதானிக்கப்பட்ட விடயங்கள் மற்றும் கிராம பகுதிகளில் வடகீழ் பருவப்பெயற்சிக்கான அனர்த்த முன்னாயத்த விஷேட கலந்துரையாடலொன்று இன்றையதினம் (20.10.2023) மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்றது.
மண்முனைவடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம பகுதிகளில் பராமரிப்பற்ற காணிகள் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகள் பற்றியும் பராமரிப்பற்ற வடிகான்கள் குறித்து மேற்கொள்ளவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது. எதிர்வரும் காலம் மழைக்காலம் என்பதனால் வெள்ள அனர்த்த முன்னாயத்த நடவடிக்கையினை மேற்கொள்ள செய்யவேண்டிய செயற்பாடுகள் தொடர்பிலும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன.
மண்முனைவடக்கு பிரதேச செயலாளர் திரு.V. வாசுதேவன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களான திருமதி.பிரணவ சோதி மற்றும் திருமதி கணேசமூர்த்தி என்போர் கலந்து கொண்டதுடன், சமூர்த்தி உத்தியோகத்தர்கள்,மாநகரசபை உத்தியோகத்தர்கள் ,இராணுவத்தினர், பொலிஸ் உயர் அதிகாரிகள், ஏனைய அரச உத்தியோகத்தர்கள் முன்வைத்த பிரச்சனைகளுக்கு மண்முனைவடக்கு பிரதேச செயலாளர் தீர்வுகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.