கனடாவின் ஒட்டாவாவில் 33 மதத் தலைவர்கள் கூட்டாக இணைந்து பிரகடனமொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்பொழுது நிலவி வரும் போர் பதற்ற நிலையின் எதிரொலியாக கனடாவில் குரோத உணர்வைத் தூண்டும் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன.
இவ்வறான குரோத உணர்வு குற்றச்செயல்களை கண்டிக்கும் வகையில் இந்த கூட்டு பிரகடனம் கையொப்பமிட்டுள்ளது.
இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் யூத மதங்களைச் சேர்ந்த தலைவர்களும் ஏனைய மதத் தலைவர்களும் கூட்டாக இணைந்து இந்த கண்டன பிரகடனத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
அனைத்து வகையிலான வெறுப்புணர்வு நடவடிக்கைகளும் கண்டிக்கப்பட வேண்டுமென அந்த பிரகடனத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் பல்வேறு இடங்களில் இடம்பெறும் நிகழ்வுகளின் எதிரொலியாக கனடாவில் வெறுப்புணர்வு வன்முறைகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டாவாவின் நகர முதல்வர் மார்க் சுட்கிலிப் முன்னிலையில் இந்த பிரகடனம் கையொப்பமிடப்பட்டுள்ளது.