அனைத்து மதங்களையும் சமமாக நடத்துவதே எங்கள் கொள்கை. அனைவருக்கும் சம உரிமை வழங்குவதே எங்கள் நோக்கம் என்று நேற்று மன்னார் வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன், இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் பலஸ்தீன மக்களை பலிக்கடா ஆக்குவதை ஏற்றுக்
கொள்ளவில்லை அங்கு, மோதல்களை தடுத்து அமைதியை நிலைநாட்ட ஐ. நா. பொதுச் செயலாளரின் வேலைத் திட்டத்துக்கு முழு ஆதரவு வழங்குவோம் என்றும் ஜனாதிபதி கூறினார்.
தேசிய மீலாதுன் நபிநிகழ்வு நேற்று மன்னார் முசலி தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்
மன்னார் மாவட்டத்துக்கு அபிவிருத்தி தேவை. இந்தப்பகுதி போரால் பாதிக்கப்பட்ட பகுதி. எனவே,
இந்தப் பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றுவதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றோம்.
குறிப்பாக, மன்னார் மாவட்டத்தில் வீதிகள் அமைப்பது தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடி வருகின்றோம். குறிப்பாக, இப்பிரதேசத்தில் வீடுகளை நிர்மாணிப்பது போன்று கல்வியும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
மன்னார் நகரில் கல்வி நன்றாக உள்ளது. ஆனால் மாவட்டத்தின் பிறபகுதிகளில் உள்ள கல்வியில் திருப்தியடைய முடியாது. அத்துடன், இந்தப் பிரதேசத்தில் பெரும் அபிவிருத்தி குறித்தும் திட்டமிட்டுள்ளோம்.
இந்தியாவுக்கும் மன்னாருக்கும் இடையில் கப்பல் போக்குவரத்து சேவையை ஏற்படுத்துவதற்கான பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனை காங்கேசன்துறையில் ஆரம்பித்தோம். அடுத்து தலைமன்னாரில் ஆரம்பிக்கப்படும். இதேநேரம் இந்தியாவும், இலங்கையும் இணைந்து மின்சார அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளன. அது இந்த மன்னார் ஊடாகவும் நடக்க இருக்கிறது என்பதை நான் கூற விரும்புகிறேன். இது வெறும் ஆரம்பம்தான். இதன் மூலம் எதிர்காலத்தில் மன்னார் அபிவிருத்தி அடையும். இந்த பகுதியில் பசுமை பொருளாதாரம் மற்றும் பசுமை ஆற்றலுக்கு அதிக சாத்தியம் உள்ளது.
இங்கு கிடைக்கும் சூரிய சக்தியை கொண்டு இப்பகுதியை மேம்படுத்த முடியும். புத்தளத்திலிருந்து மன்னார் வரை யாழ். குடாநாட்டின் ஊடாக முல்லைத்தீவு வரை அந்த வாய்ப்புள்ளது.மன்னாரை சுற்றுலா மையமாக மாற்ற நாங்கள் விரும்புகிறோம். அதே நேரம் மீன்பிடி தொழில் வளர்ச்சி அடையும்போது மன்னாருக்கு புதிய பொருளாதாரம் கிடைக்கும்.
இன்று நாம் நபிகள் நாயகத்தை நினைவு கூருவோம். நபிகள் நாயகம் அவர்கள் கூறிய அதே கோட்பாடுதான் இன்று இலங்கையில் உள்ளது. எனவே இந்த விழாவை தேசிய விழாவாக கருதுகிறோம். அனைத்து மதங்களையும் சமமாக நடத்துவதே எங்கள் கொள்கை. மேலும் அனைவருக்கும் சம உரிமை வழங்குவதே எங்கள் நோக்கம். இங்குள்ள முஸ்லிம் மக்க ளுக்கு சில பிரச் னைகள் உள்ளன.
அரசும் அவற்றை தீர்க் கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என் பதை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். நான் திவாலான நாட்டை கைப்பற்றி னேன். அந்த திவால் நிலையில் இருந்து இன்னும் மீண்டு வருகிறோம். எனவே, அந்த பணியை முறையாக மேற்கொள்ள வுள்ளோம்.
நபிகளார் இந்த கோட்பாட்டை பிரசங்கித்த போது, எல்லா கிறிஸ்தவ யூதர்களும் அந்தப் பகுதியில் வாழ்ந்தார்கள். எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், இன்று பெரிய பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக, பலஸ்தீன விவகாரம் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அதற்கு முன்னதாகவே அரசாங்கம் தனது கருத்தை தெரிவித்தி ருந்தது. பாராளுமன்றத்திலும் கருத்
துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
20 உணவு லொறிகள் காஸாவுக்கு கொண்டு செல்லப்பட்டன என்று கேள்விப்பட்டோம். ஆனால் இது போதுமா என்ற கேள்வி எழுகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக பலஸ்தீன மக்கள் காஸா பகுதியில் சிக்கித் தவிக்கின்றனர்.அந்த மக்களின் துயரத்தை நாங்கள் மன்னிக்கவில்லை. அந்த மக்களுக்கு தேவையான உணவுகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். உணவு இஸ்ரேலில் இருந்து மட்டுமல்ல, எகிப்திலி ருந்தும் வழங்கப்பட வேண்டும். மேலும் தண்ணீர் கொடுக்க வேண்டும்.
இஸ்ரேல் – ஹமாஸ் சண்டை ஒரு பிரச்னை. ஆனால், இந்தப் போராட்டத்தில் சாதாரண பலஸ்தீன மக்கள் பலியாகிவிடக்கூடாது. எனவே, அதனை தீர்க்க எகிப்து உள்ளிட்ட அரபு நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. மற்ற நாடுகளும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன. குறிப்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் இந்தப் பிரச்னையை தீர்த்து அந்தப்பிரதேசங்களில் அமைதியை ஏற்படுத்துவதற்கான செயல்பாடுகளுக்கு எமது பூரண ஆதரவை வழங்குவோம் – என்றார்.