Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரியே தவிர, ஆன்மீகத்துக்கு அல்ல;முதல்வர் மு.க. ஸ்டாலின்!

நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரியே தவிர, ஆன்மீகத்துக்கு அல்ல;முதல்வர் மு.க. ஸ்டாலின்!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரியே தவிர, ஆன்மீகத்துக்கு அல்ல என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீட் பரீட்சையை இரத்து செய்யக்கோரி மாணவர்கள் முன்னெடுக்கும் கையெழுத்து போராட்டத்தில் பங்கேற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “தமிழினத்தை தலை நிமிர்த்துவதற்காக பிறந்த இயக்கம் தான் திராவிட இயக்கம். இப்போது ‘சீவிடுவேன் சீவிடுவேன்’ என சொல்கிறார்களே, அப்படி யாருடைய தலையையும் எடுக்க பிறந்த இயக்கமல்ல. சமூக வலைத்தளங்கள் ஒருவரை ஒரே
நாளில் புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும். ஒருவர் பல காலம் கட்டமைத்த பிம்பத்தை சில நொடிகளில் உடைத்தும் விடும்.

எதிர்மறை பிரசாரத்தின் மூலம் எதிரியை வீழ்த்துவதைவிட, நேர்மறை பிரச்சாரத்தின் மூலம் நம்மை வளர்த்துக் கொள்வது தான் சரியானது. இந்த இயக்கத்தை அழித்து விடலாம் என நினைத்தவர்களின் எண்ணம்தான் அழிந்துவிட்டது. தி. மு. கவை கற்பனையில் கூட அழிக்க முடியாது. திராவிட இயக்கத்தை ஒழிப்பதைத் தவிர வேறு வேலையில்லை எனக் கூறியவர்கள், இறுதியில் இங்கு தான் வந்து அடைக்கலம் அடைந்தார்கள்.

நாம் இன்று பா. ஜ. க., அ. தி. மு. க. போன்றவர்களுடன் மோதிக் கொண்டிருக்கிறோம். சாதி, மதத்தின் பெயரால் பிளவு படுத்தி நாட்டை நாசம் செய்ய நினைக்ககூடிய ஒரு கூட்டத்துக்கு எதிராக மோதிக் கொண்டிருக்கிறோம். பா. ஜ. கவின் சாதித்தன்மை தமிழ்நாட்டுக்கு மட்டும் எதிரானது அல்ல. நமது இந்தியாவுக்கே எதிரானது, ஒட்டுமொத்த மனித குலத்துக்கு எதிரானது.

இப்படிப்பட்ட பாசிச வாசிகள் ஒருபக்கம். இவர்களின் பாதம் தாங்கிகளாக இருந்து தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்த அ. தி. மு. க. மறு பக்கம். கொள்கை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கக்கூடிய கூட்டம்தான் அதிமுக. பா. ஜ. கவுடன் இருந்தால் தமிழக மக்களால் புறக்கணிக்கப்படும் என்று பயந்து உள்ளே வெளியே ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டை அழிக்க நினைக்கின்ற பா. ஜ.கவும், அண்ணா பெயரால் கட்சி நடத்தி, அதை பா. ஜ. கவிடம் அடகு வைத்த அதிமுகவும் வேறு வேறு அல்ல. நாணயம் இல்லாத நாணயத்தின் இரு பக்கங்கள்.

அரசியல்வாதிகளை தாண்டி ஊடகவியலாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்களிடமும் அத்து மீறல், மிரட்டல், அடக்குமுறையை ஏவுகிறது பா. ஜ. க. இப்படிப்பட்ட சோஷியல் வைரஸைதான் நாம் துணிச்சலுடன் எதிர்த்து நிற்கிறோம். என் மனைவி துர்கா ஸ்டாலின் எந்த கோயிலுக்கு செல்கிறார் என்பதை பார்ப்பதுதான் பா. ஜ. கவினரின் ஒரே வேலையாக உள்ளது. அங்கே சென்று போட்டோ எடுத்துவிட்டு, இதோ பார்த்தீர்களா கோயிலுக்கு போகிறார் என பரப்புவார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா கோயிலுக்கும்தான்
என் மனைவி செல்கிறார். அது அவருடைய விருப்பம். அதை நான் தடுக்க விரும்பவில்லை. தடுக்கவும் தேவையில்லை. நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத் தான் எதிரியே தவிர, ஆன்மிகத்திற்கு அல்ல – என்றார்.

தொடர்புடையசெய்திகள்

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை இளைஞர்; ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்!
செய்திகள்

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை இளைஞர்; ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்!

September 21, 2026
அனோஜன் வழக்கு – பெற்றோரை நேரில் சந்தித்த ஜனாதிபதி, பொதுமன்னிப்புக்கு முழு ஆதரவு உறுதி!
செய்திகள்

அனோஜன் வழக்கு – பெற்றோரை நேரில் சந்தித்த ஜனாதிபதி, பொதுமன்னிப்புக்கு முழு ஆதரவு உறுதி!

September 21, 2026
குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!
செய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!

September 21, 2026
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!
செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!

September 21, 2026
உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!
செய்திகள்

உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!

September 21, 2026
அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!
செய்திகள்

அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!

September 21, 2026
Next Post
இஸ்ரேல், ஹமாஸ் போர் மூன்றாம் உலகப்போராக உருவெடுக்கும் அபாயம்; பாதுகாப்பு துறை நிபுணர் எச்சரிக்கை!

இஸ்ரேல், ஹமாஸ் போர் மூன்றாம் உலகப்போராக உருவெடுக்கும் அபாயம்; பாதுகாப்பு துறை நிபுணர் எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு