Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் 2024ஆம் ஆண்டு வீடு உடைத்து கையடக்கத் தொலைபேசி, பணம் திருட்டு; 4 பேர் கைது!

மட்டக்களப்பில் 2024ஆம் ஆண்டு வீடு உடைத்து கையடக்கத் தொலைபேசி, பணம் திருட்டு; 4 பேர் கைது!

49 minutes ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்புறோஸ் வீதியில் வீடொன்றை உடைத்து கையடக்கத் தொலைபேசி மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் திகதி, குறித்த பகுதியில் பூட்டியிருந்த வீடொன்றை உடைத்து சுமார் 40,000 ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியும் 5,500 ரூபா பணமும் திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசி தொடர்பான தகவல்களை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிடம் வழங்கியுள்ளனர்.

ஆணைக்குழுவின் விசாரணைகளின் அடிப்படையில், குறித்த தொலைபேசியைப் பயன்படுத்தி வந்த நபர் தொடர்பான தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.

இதனையடுத்து, மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரின் பெரும் குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில், குறித்த தொலைபேசியைப் பயன்படுத்தி வந்த நபர் மட்டக்களப்பு நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், காத்தான்குடியிலுள்ள கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் பணம் கொடுத்து அதனை வாங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, தொலைபேசியை விற்பனை செய்த கடை உரிமையாளர் உள்ளிட்ட மேலும் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் 24, 38, 45 மற்றும் 50 வயதுடையவர்கள் எனவும், மட்டக்களப்பு நகர் மற்றும் காத்தான்குடி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பழுகாமம் பகுதியில் 20 லீற்றர் கசிப்பு மீட்பு; பெண் ஒருவர் கைது!
செய்திகள்

பழுகாமம் பகுதியில் 20 லீற்றர் கசிப்பு மீட்பு; பெண் ஒருவர் கைது!

November 5, 2026
சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!
செய்திகள்

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

November 5, 2026
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம்; 72 மணித்தியால தடுப்புக்காவலை 48 மணித்தியாலங்களாகக் குறைக்க ஜனாதிபதி தீர்மானம்!
செய்திகள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம்; 72 மணித்தியால தடுப்புக்காவலை 48 மணித்தியாலங்களாகக் குறைக்க ஜனாதிபதி தீர்மானம்!

November 5, 2026
தேசிய மக்கள் சக்தியின் மஹர பிரதேச சபை தவிசாளர் பதவி விலகத் தீர்மானம்!
செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் மஹர பிரதேச சபை தவிசாளர் பதவி விலகத் தீர்மானம்!

November 5, 2026
பயணிகளுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் கனடா முதலிடம்
செய்திகள்

பயணிகளுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் கனடா முதலிடம்

November 5, 2026
9 மாதங்களாகியும் மகனைக் கொன்ற பொலிஸார் கைது செய்யப்படவில்லை; நீதி கோரி தாய் கண்ணீர்!
செய்திகள்

9 மாதங்களாகியும் மகனைக் கொன்ற பொலிஸார் கைது செய்யப்படவில்லை; நீதி கோரி தாய் கண்ணீர்!

November 5, 2026
Next Post
பழுகாமம் பகுதியில் 20 லீற்றர் கசிப்பு மீட்பு; பெண் ஒருவர் கைது!

பழுகாமம் பகுதியில் 20 லீற்றர் கசிப்பு மீட்பு; பெண் ஒருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு