தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழுள்ள மஹர பிரதேச சபையின் தவிசாளர் அத்துல களுஆராச்சி, தனது தவிசாளர் பதவி மற்றும் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
தனது பதவி விலகல் திடீரென எடுக்கப்பட்ட முடிவல்ல எனக் குறிப்பிட்டுள்ள அவர், சில வருடங்களுக்கு முன்னர் கட்சியுடன் எட்டப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், பதவிகளிலிருந்து விலகுவது தனது அரசியல் இலக்குகளைக் கைவிடுவதையோ அல்லது மக்களுக்கான அர்ப்பணிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதையோ குறிக்காது என்றும் அத்துல களுஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.








