குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் பொலிஸ் அதிகாரிக்கு ரூ.5,000 உதவித்தொகை வழங்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு தீர்மானித்துள்ளது.
இதன்படி, இத்திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளதுடன், இக்காலப்பகுதியில் குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபரை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தரின் சம்பளத்திற்கு மேலதிகமாக ஐயாயிரம் ரூபா கொடுப்பனவும், கைது செய்பவர்களுக்கு சன்மானமும் வழங்கப்படும் என போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்தார்.
அதிகாரிகளை ஊக்குவிக்கவும், விபத்துகளைத் தடுக்கவும் இந்த முன்னோடித் திட்டம் தொடங்கப்படவுள்ளது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.